செலவு குறைந்த நகரங்கள் பட்டியலில் சென்னை!!!


உலகின் மலிவான (செலவு குறைந்த) நகரங்களில் இந்தியாவின் சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி உள்ளிட்ட மெட்ரோ நகரங்களும் உள்ளன என்று பொருளாதாரப் புலனாய்வு நிறுவனத்தின் 2018ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கை கூறியுள்ளது.

உலகின் முக்கிய நகரங்களில் வாழ்வதற்கான செலவுகளைக் கணக்கிட்டு மலிவான நகரங்களை பொருளாதாரப் புலனாய்வு நிறுவனம் பட்டியலிட்டு வருகிறது. இதுகுறித்த 2018ஆம் ஆண்டுக்கான ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: 'உலக நாடுகளைப் பொறுத்தவரையில் தெற்காசிய நகரங்கள்தான் மலிவான செலவில் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகளை அதிகளவில் கொண்டுள்ளன. குறிப்பாக இந்தியா, பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் உள்ள நகரங்களில் வாழ்வதற்குக் குறைவாகவே செலவாகின்றது.

இந்தியாவைப் பொறுத்தவரையில் சென்னை, பெங்களூரு மற்றும் டெல்லி ஆகிய நகரங்களும், பாகிஸ்தானில் கராச்சியும் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளன. வாழ்வதற்குத் தேவையான பொருட்கள் அந்த நகரங்களைச் சுற்றியுள்ள கிராமங்களிலிருந்து மலிவாகக் கிடைப்பதால் மேற்கண்ட நகரங்களில் பொருட்களை வாங்கக் குறைவாகவே செலவாகிறது. அதேபோல சில பொருட்களுக்கு அரசாங்கமும் மானியம் வழங்கி வருகிறது.'

குறைவாகச் செலவாகும் நகரங்களின் பட்டியலில் சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸ் முதலிடத்தைப் பெற்றுள்ளது. வெனிசுலாவின் தலைநகரான கராகஸ் இரண்டாவது இடத்திலும், கஜகிஸ்தானின் அல்மாதி மூன்றாவது இடத்திலும், லாகோஸ் நான்காவது இடத்திலும், பெங்களூரு ஐந்தாவது இடத்திலும் உள்ளன. கராச்சி ஆறாவது இடத்திலும், அல்கேயிர்ஸ் ஏழாவது இடத்திலும், சென்னை எட்டாவது இடத்திலும், புக்காரெஸ்ட் ஒன்பதாவது இடத்திலும், டெல்லி பத்தாவது இடத்திலும் உள்ளன.

அதேபோல அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாகச் சிங்கப்பூர் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பாரிஸ் இரண்டாவது இடத்திலும், ஜூரிச் மூன்றாவது இடத்திலும், ஹாங்காங் நான்காவது இடத்திலும், ஓஸ்லோ ஐந்தாவது இடத்திலும் உள்ளன. ஜெனிவா ஆறாவது இடத்திலும், சியோல் ஏழாவது இடத்திலும், கோபேன்ஹேகன் எட்டாவது இடத்திலும், டெல் அவிவ் ஒன்பதாவது இடத்திலும், சிட்னி பத்தாவது இடத்திலும் உள்ளன.

உணவுப் பொருட்கள், குடிபானங்கள், ஆடைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், தனிப்பட்ட கவனிப்புக்கான பொருட்கள், வீட்டு வாடகை, போக்குவரத்துச் செலவுகள், பயன்பாட்டுக் கட்டணங்கள், தனியார் பள்ளிகள், உள்நாட்டு உதவிகள் மற்றும் பொழுதுபோக்குச் செலவுகள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தப் பட்டியல் தயார் செய்யப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...