பரங்கிமலை: அரசு பள்ளி, மாணவ - மாணவியரை,
கிண்டி சிறுவர் பூங்கா அழைத்து சென்ற ஆசிரியர்,மாரடைப்பால் பலியானார்.சென்னை, ஆழ்வார்திருநகரை சேர்ந்தவர் வெங்கடேசன், 44. படப்பையில் உள்ள, அரசு மேல்நிலை பள்ளியில், ஆசிரியராக பணி புரிந்தார்.நேற்று, பள்ளி நிர்வாகம், மாணவ - மாணவியரை, தனியார் பேருந்தில், கிண்டி சிறுவர் பூங்கா அழைத்து சென்றது. அவர்களுடன், வெங்கடேசனும் சென்றார்.கிண்டி கத்திப்பாரா பாலம் அருகில், பேருந்து சென்றபோது, வெங்கடேசனுக்கு திடீரெனமாரடைப்பு ஏற்பட்டது.உடனே அவர், அருகில் உள்ள, ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்; ஆனால், அங்கு அவர் இறந்தார்.பரங்கிமலை போலீசார் விசாரிக்கின்றனர்.