பெண்களுக்கு கல்லூரி வரை இலவச கல்வி: ஒரு பைசா கூட கட்ட வேண்டாம்!


பெண் குழந்தைகளுக்கு இனி இலவச கல்வி வழங்கப்படும் என கார்நாடக அரசு
 தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் தொலைநோக்கு பார்வை 2025 என்ற புத்தகத்தை காங்கிரஸ் வெளியிட்டது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, ஒரு மாநிலத்தின் வளர்ச்சி தொலைநோக்கு பார்வையை மையமாக வைத்து தான் இருக்கும்.
அந்த வகையில்,ஆளும் காங்கிரஸ் அரசு தொலைநோக்கு பார்வை 2025 என்ற நூலை வெளியிட்டு உள்ளது. அனைத்து மக்களின் வளர்ச்சியையும் உள்ளடக்கி,விரைவான வளர்ச்சிக்கு ஆயத்தம் செய்கிறது காங்கிரஸ் கட்சி என புகழாரம் சூட்டினார்.
அன்ன பாக்ய திட்டம்
‘ஸ்டார்ட் அப்‘ எனப்படும் பொது சுகாதார காப்பீட்டு திட்டத்தின் மூலம் லட்சகணக்கான ஏழை குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கப்படும் என்று தெரிவித்தார்.


பெண் குழந்தைகளுக்கு
மேலும் தொடக்கப்பள்ளி முதல் கல்லூரி வரை பெண்களுக்கு, இலவச கல்வி வழங்க கார்நாடக அரசு முடிவு செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் பெண்கள் முழுமையான கல்வியை பெறக் கூடிய வாய்ப்பை பெறுவார்கள்.
இந்த திட்டம் அம்மாநில மக்களிடேயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...