முதுநிலை மருத்துவப் படிப்பில் கூடுதல் மதிப்பெண்?

மருத்துவ மேற்படிப்பில் சேர, கூடுதல் மதிப்பெண்கள் வழங்குவதற்காக
தொலைதூரப் பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளை வகைப்படுத்தி பிறப்பித்த அரசாணையை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மருத்துவ மேற்படிப்பில் சேர, தொலைதூரப் பகுதி மற்றும் எளிதில் அணுக முடியாத பகுதிகளில் பணியாற்றும் அரசு மருத்துவர்களுக்கு 10 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படுகிறது.

வரும் 2018- 19ஆம் ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக, அரசு மருத்துவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், எந்தெந்த பகுதிகள் தொலைதூரப் பகுதிகள், எளிதில் அணுக முடியாத பகுதிகள் என வகைப்படுத்தி, கூடுதல் மதிப்பெண் வழங்குவது தொடர்பாக கடந்த 23ஆம் தேதி தமிழக அரசு அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையை ரத்து செய்யக் கோரி காஞ்சிபுரம், திருப்பூர், தஞ்சாவூர் மாவட்ட ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவர்களாகப் பணியாற்றும் பிரவின் உள்பட 4 பேர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்கு நீதிபதி கல்யாண சுந்தரம் முன் இன்று (மார்ச் 29) விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், “புவியியல் அமைப்பின் அடிப்படையில் மருத்துவ சேவைகள் சென்றடைய இயலாத பகுதிகளையே எளிதில் அணுக முடியாத, தொலைதூரப் பகுதிகளாக அறிவிக்க வேண்டுமே தவிர, மருத்துவர்கள் எண்ணிக்கை அடிப்படையில் அறிவிக்கக் கூடாது” என்று வாதிட்டார்.

இதையடுத்து, மனுவுக்கு ஏப்ரல் 2ஆம் தேதி பதிலளிக்க தமிழக அரசுக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...