பார்வையற்ற பட்டதாரிகள் உண்ணாவிரத போராட்டம்!!!

சென்னை:முதல்வரை சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கும் விஷயத்தில்,
சமூகநலத் துறை அமைச்சர் ஏமாற்றியதால், பார்வையற்ற பட்டதாரிகள் சங்கத்தினர், நாளை முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளனர்.
கல்லுாரி பட்டதாரிகள், பார்வையற்றோர் 3,000க்கும் மேற்பட்டோர் உள்ளனர். அவர்கள் சங்கம் சார்பில், பார்வையற்ற, ஊனமுற்ற பட்டதாரிகளுக்கான வேலைவாய்ப்பு உள்ளிட்ட, 22 அம்ச கோரிக்கையை, தமிழக அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இது தொடர்பாக, முதல்வரை சந்தித்து,கோரிக்கை மனு அளிக்கும் வரை, தொடர் போராட்டம் அறிவித்துள்ளனர். இது குறித்து, கல்லுாரி பட்டதாரிகள் பார்வையற்றோர் சங்க தலைவர், பட்டாபிராமன் கூறியதாவது:

தமிழக முதல்வரை சந்தித்து, கோரிக்கை மனு அளிக்கும் வரை, போராட்டம் என, பிப்., 26ல் அறிவித்தோம். அப்போது, சமூகநலத் துறை அமைச்சர் சரோஜா, எங்களுடன், பிப்., 24ல் பேச்சு நடத்தி, முதல்வரை சந்திக்க ஏற்பாடு செய்வதாக, உறுதி அளித்தார். அதை நம்பி போராட்டத்தை கைவிட்டோம்.எந்த நடவடிக்கையும் இல்லாததால், நாளை முதல், தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம். முதல்வரை சந்திக்கும் வரை, இந்த போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...