புதுடில்லி: திருப்பரங்குன்றம் தொகுதி அதிமுக வேட்பாளர் போஸ் வெற்றி பெற்றதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் ஜெயலலிதா கை ரேகையை தாக்கல் செய்ய வேண்டும் என பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு சென்னை ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவை சுப்ரீம் கோர்ட் ரத்து செய்தது.
மேல்முறையீடு
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் ஏகே போஸ் வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என அவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் சரவணன் சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். மேலும், சின்ன ஒதுக்கீட்டு மனுவில் இடம்பெற்றிருந்த ஜெயலலிதாவின் கைரேகை குறித்தும் சந்தேகம் எழுப்பியிருந்தார்.
இதனை விசாரித்த ஐகோர்ட், ஜெயலலிதா கைரேகையை தாக்கல் செய்ய பெங்களூரு சிறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது. இதனை எதிர்த்து போஸ் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட், ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. இந்த தடையை நீக்க வேண்டும் என சரவணன் மேல்முறையீடு செய்தார்.
திருப்பி அனுப்ப உத்தரவு
போஸ், சரவணன் தொடர்ந்த இரண்டு மனுக்களையும் ஒன்றாக சேர்த்து விசாரணை நடத்திய சுப்ரீம் கோர்ட், ஜெயலலிதாவின் கைரேகையை தாக்கல் செய்ய வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்தது. பெங்களூரு சிறையிலிருந்து பெறப்பட்ட கைரேகையை திருப்பி அனுப்ப வேண்டும். கைரேகை பதிவு இல்லாமல் தொடர்ந்து விசாரணை நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
Advertisement
» தற்போதைய செய்தி முதல் பக்கம்
Home வாசகர் கருத்து (1)
Madhav - Chennai,இந்தியா 21-மார்-2018 17:59
தேர்தல் படிவத்தில் உள்ள கைரேகையை ஒப்பிட உயிருடன் உள்ள பொது எடுக்கப் பட்ட கைரேகையை கேட்பதில் என்ன தவறு உள்ளது. குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுக்கிறது. இதை ஏன் உச்ச நீதிமன்றம் தடை செய்துள்ளது. இதன் பின்னே மிகப்பெரிய அரசியல் ஊழல் உள்ளது. மத்திய அரசின் பங்கு என்ன. இப்படி ஒரு நிலையில் தேர்தல் கமிசன், உச்ச நீதி மன்றம் போன்றவற்றின் மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கை காலி பெருங்காய டப்பா தானா?
கருத்தைப் பதிவு செய்ய
மேலும் செய்திகள் :
டிஜிபி அலுவலகத்தில் போலீசார் தீக்குளிக்க முயற்சி
தகவல்களை திருடி தான் காங்., வெற்றி பெற்றதா? ரவிசங்கர் கேள்வி
காபூலில் பயங்கரவாத தாக்குதல் : 26 பேர் பலி
பா.ஜ.,வுடன் கூட்டுமில்லை, ஆதரவுமில்லை: முதல்வர்
எம்.பி.,க்கள் சம்பளம் 'கட்': பா.ஜ., யோசனைக்கு டிஆர்எஸ் பாராட்டு
Advertisement
© 2018 Dinamalar
மேலே செல்ல ↑ All Rights Reserved
