BREAKING NEWS:வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது 'ஜிசாட்- 6 ஏ' - தகவல் தொழில்நுட்பத்தில் மேலும் ஒரு மைல்கல்


ஸ்ரீஹரிகோட்டா: அதிநவீன, 'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக்கோளை சுமந்தபடி ஜி.எஸ்.எல்.வி., - எப் 8 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான, 'இஸ்ரோ' சார்பில், பி.எஸ்.எல்.வி., மற்றும் ஜி.எஸ்.எல்.வி., ரக ராக்கெட்டுகள் விண்ணில் செலுத்தப்பட்டு வருகின்றன. அந்த வகையில், தகவல் தொடர்பு வசதிக்கான அதிநவீன, 'ஜிசாட்- 6 ஏ' செயற்கைக்கோளை, 'இஸ்ரோ' வடிவமைத்து உள்ளது.

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த செயற்கைக்கோள், ஆந்திரா மாநிலம், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள, சதீஷ் தவான் விண்வெளி ஆராய்ச்சி மையத்தில் உள்ள, இரண்டாவது ஏவுதளத்தில் இருந்து, இன்று மாலை, 4:56 மணிக்கு, ஜி.எஸ்.எல்.வி.,- எப் -8 ராக்கெட் மூலம், விண்ணில் செலுத்தப்பட்டது.

தற்போது செலுத்தப்பட உள்ள ராக்கெட், ஜி.எஸ்.எல்.வி., ரகத்தில், 12வது ராக்கெட். இதில், முழுவதும் உள்நாட்டு தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்டுள்ள, ஆறாவது, 'கிரையோஜெனிக் இன்ஜின்' பொருத்தப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...