புதிய 100 ரூபாய் நோட்டு; ரிசர்வ் வங்கி திட்டம்


கான்பூர் : புதிய, 100 ரூபாய் நோட்டை விரைவில் வெளியிட, ரிசர்வ் வங்கி திட்டமிட்டுள்ளது.


'பழைய, 1,000, 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது' என, அறிவிக்கப்பட்ட பின், ரிசர்வ் வங்கி, புதிய, 2,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகளை புழக்கத்தில் விட்டது. இந்நிலையில், தற்போது புழக்கத்தில் உள்ள, பழைய ரூபாய் நோட்டுகளுடன், புதிய, 100 ரூபாய் நோட்டுகளை வெளியிடும் நடவடிக்கையில், ரிசர்வ் வங்கி ஈடுபட்டுள்ளது.


பழைய, 100 ரூபாய் நோட்டை விட, புதிய, 100 ரூபாய் நோட்டின் நீளம் மற்றும் அகலம் குறைவாகவும், 20 சதவீதம் எடை குறைவாகவும் இருக்கும். வரும், மே மாதத்திற்குள், புதிய, 100 ரூபாய் நோட்டு அச்சிடப்படும் பணி முடிந்து, ஜூன் மாதம் முதல், புழக்கத்துக்கு வரும் என, ரிசர்வ் வங்கி வட்டாரங்கள் தெரிவித்தன.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...