என்ஜின் இல்லாமல் 10 கிலோமீட்டர் சென்ற ரயில்!


ஏராளமான பயணிகளுடன் சென்ற அகமதாபாத் - பூரி எக்ஸ்பிரஸ் ரயில் நேற்றிரவு (ஏப்ரல் 7) என்ஜின் இல்லாமல் சுமார் 10 கிலோமீட்டர் தூரம் வரை சென்றுள்ளது.

ஒடிசாவில் உள்ள டிட்டிலாகர் நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்ற அகமதாபாத் - பூரி எக்ஸ்பிரஸ் ரயிலில் பராமரிப்புக்காக நேற்றிரவு என்ஜின் நீக்கப்பட்டது. ஆனால், என்ஜினை நீக்கும்போது அதனுடன் சோ்த்து ஸ்கிட் பிரேக்குகளையும் நீக்குவது வழக்கம்.

ஆனால், ஸ்கிட் பிரேக்குகளை நீக்காததால், ரயில் 10 கிலோமீட்டர் தூரம் வரை சென்றுள்ளது. பின்னர் கட்டுப்பாடு இழந்த ரயிலைக் தண்டவாளத்தின் குறுக்கே கல்லை அடுக்கி நிறுத்தியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஏராளமான பயணிகளுடன் ரயில், என்ஜின் இல்லாமல் சென்றாலும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. ரயிலில் பயணம் செய்த பயணிகளுக்கும் எந்த ஆபத்தும் ஏற்படவில்லை என்று ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...