தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை!

தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும்
எனச் சென்னை வானிலை மையம் நேற்று (ஏப்ரல் 28) அறிவித்துள்ளது.

சென்னை வானிலை மைய அதிகாரிகள்,“தமிழகத்தில் கடந்த சில நாட்களாகக் கோடை மழை சில இடங்களில் பெய்து வருகிறது. தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்குக் கோடை மழை, பெய்யும். சில இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும். சென்னையில், சில இடங்களில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். தமிழகம் முழுவதும், பரவலாக சுழல் காற்று வீசும். பலத்த காற்று வீசும் என்பதால் இன்று (ஏப்ரல் 29) மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்” எனத் தெரிவித்துள்ளனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணிநேரம் நிலவரப்படி, உசிலம்பட்டி, தக்கலை, கடலாடி ஆகிய இடங்களில் 2 செமீ மழையும், பெரியாறு, பவானி, நிலக்கோட்டை, மானாமதுரை, ஈரோடு, பெரியகுளம், குன்னுார், ஆகிய இடங்களில் 1 செமீ மழையும் பெய்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...