இரண்டாக பிளவுப்பட்டு வருகிறது ஆப்ரிக்க கண்டம்: ஆய்வில் பகீர் தகவல்!!!


நைரோபி: ஆப்ரிக்கா கண்டத்தில் பிளவு ஏற்பட்டு வருகிறது என ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. கென்யாவில் ஏற்பட்டுள்ள நிலநடுக்கம், மழை, வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவு போன்ற காரணங்களால் ஏற்பட்ட மிகப்பெரிய நிலப்பிளவு இதற்கு காரணம் எனவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
இது குறித்து லண்டன் பல்கலை. ராயல் ஹாலோவேயின் ஆராய்ச்சியாளர் ஒருவர், எழுதியுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: சமீபத்தில் ஆப்பிரிக்க கண்டத்தில் நில அதிர்வு ஏற்பட்ட போது கென்யாவின் தென்மேற்கு பகுதியில் உள்ள நைரோபி - நரோக் நெடுஞ்சாலை முழுவதும் பலத்த சேதமடைந்தன. இந்த நில அதிர்வை தொடர்ந்து வடக்கே ஏடன் வளைகூடா தொடங்கி தெற்கே ஜிம்பாப்வே வரை சுமார் 3000 கி.மீ. தூரத்திற்கு பிளவு ஏற்பட்டுள்ளது. இந்த பிளவு ஆப்பிரிக்க கண்டத்தை சமமற்ற இரு தட்டுகளாக பிரித்துள்ளது. மழை, வெள்ளம், பூகம்பம் போன்ற இயற்கை பேரழிவு உள்ளிட்ட காரணங்களால் இந்த பிளவு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போகும் பட்சத்தில் ஆப்பிரிக்க கண்டம் இரண்டாக பிளவுபட வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...