அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு!!!

சென்னை:தமிழக அரசு ஊழியர்களுக்கான, அகவிலைப்படி, 5 சதவீதத்தில்
இருந்து, 7 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு, சமீபத்தில், 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கும், 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இதற்கான அரசாணை நேற்று வெளியிடப் பட்டது. இதன்படி, தற்போதுள்ள, 5 சதவீத அகவிலைப்படி, 7 சதவீதமாக உயர்ந்து உள்ளது.'உயர்த்தப்பட்ட அகவிலைப்படி, 2018 ஜன., 1 முதல் அமலுக்கு வருவதால், மூன்று மாதத்திற்கான நிலுவைத்தொகை வழங்கப்படும். 'இந்த அகவிலைப்படி உயர்வு, ஓய்வூதியர் கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கும் பொருந்தும்' என, தமிழக அரசு அறிவித்து உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...