ஐந்து மாநிலங்களில் ஆன்லைன் பில் வசதி!


உள்மாநில சரக்குப் போக்குவரத்துக்கான ஆன்லைன் பில் வசதி ஏப்ரல் 15ஆம் தேதி முதல் தொடங்கப்படும் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

ரூ.50,000க்கும் அதிகமான மதிப்புடைய சரக்குப் பொருட்களின் மாநிலங்களுக்கு இடையேயான போக்குவரத்துக்கு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் ஆன்லைன் பில் வசதி துவங்கப்பட்டது. இதே போல உள்மாநில சரக்குப் போக்குவரத்துக்கான ஆன்லைன் பில் வசதி ஏப்ரல் 15 முதல் அமல்படுத்தப்படும் என்று நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் முதற்கட்டமாக ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, குஜராத், கேரளா, உத்தரப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் ஆன்லைன் பில் வசதி தொடங்கப்படும் என நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கான ஆன்லைன் பில் வசதி ஏப்ரல் 1 முதல் தொடங்கப்பட்ட பிறகு ஏப்ரல் 9ஆம் தேதி வரையில் 63 லட்சத்துக்கும் அதிகமான ஆன்லைன் பில்கள் உருவாக்கப்பட்டுள்ளன. மாநிலங்களுக்கு இடையேயான சரக்குப் போக்குவரத்துக்கான ஆன்லைன் பில் வசதியை ஏப்ரல் 1ஆம் தேதி முதலும், உள்மாநில சரக்குப் போக்குவரத்துக்கான ஆன்லைன் பில் வசதியை ஏப்ரல் 15 முதலும் தொடங்க கடந்த மாதம் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. வணிகர்கள் மற்றும் சரக்குப் போக்குவரத்து நிறுவனங்கள் இ-பில் போர்டலில் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...