வந்த வழியே அனுப்பலாம் வயிற்றுப்புண்ணை!

நாட்டு மருந்து கடையில் அதிமதுரம் பொடியை வாங்கி அதில் ஒரு டீஸ்பூன் எடுத்து
அத்துடன் தேன் சேர்த்து குழைத்துச் சாப்பிட்டால் குடல் புண் ஆறும். இருமல், சளி அகலும்.

வாரம் ஒருமுறை மணத்தக்காளிக் கீரையைப் பருப்பு சேர்த்துச் சாப்பிடுங்கள். பொன்னாங்கண்ணி கீரையை வாரம் ஒருமுறை சாப்பிடுங்கள். உடலும் கண்ணும் குளிர்ச்சியடையும் அல்சர் வராது.

இரவு மீந்த சாதத்தில் நீர் ஊற்றி சிறிய வெங்காயத்தை வெட்டிப் போட்டு காலையில் அதை அப்படியே மென்று சாப்பிடுங்கள். வாரம் இரு நாள்களாவது இப்படிச் சாப்பிடுங்கள். உடல் சூடு தணிந்து வயிற்றுப்புண் ஆறும்.

மேலும் கவலை, மன அழுத்தம் காரணமாகவும் வயிற்றில் அதிக அமிலம் சுரப்பதன் மூலமும் அல்சர் ஏற்படும். வயிற்றுப்புண் வயிற்றைக் காட்டிலும் சிறுகுடல் மேற்பகுதியில் உருவாகிறது. சுமார் 4 சதவிகிதம் வயிற்றுப்புண்கள் உயிருக்கு ஆபத்தான கட்டிகளால் ஏற்படுகின்றன. பொதுவாக வயிற்றுப்புண், சூலை நோய் எனவும் அழைக்கப்படுகிறது.

காரமான ஊறுகாய், மிளகாய் வற்றல் என்று வாய் ருசிக்காகச் சாப்பிடாதீர்கள். பரோட்டா வேண்டவே வேண்டாம். பிராய்லர் கோழிக்கறி வேண்டாம். சர்க்கரையைத் தவிர்த்து வெல்லம் சேர்த்துக் கொள்ளுங்கள்.

இரவு பணி முடித்துவிட்டு 11 மணிக்கு மேல் நடு இரவில் கடினமான உணவுகளை உண்ணுதல் கூடாவே கூடாது. இவ்வாறு உண்டுவிட்டு உடன் உறங்கச் செல்வது அதைவிடப் பெருங்கேடு. இரவு உணவை 9 மணிக்குள் உணவை முடித்துவிடுங்கள்.

வீட்டுக்கு வர நேரமாகும் என்றால் வீட்டிலிருந்து உணவை எடுத்துச் சென்று அல்லது உணவகத்தில் சரியான நேரத்தில் சாப்பிட்டுவிடுங்கள்.

தயிர் சாப்பிடாதீர்கள். நீர் அதிகம் கலந்து மோர் சாப்பிடுங்கள். ஒரு டம்ளர் மோரில் 260 மி.கி கால்சியம் ஏழு மில்லியன் லாக்டோ பாசில்ஸ் உள்ளது. மோர் பெருக்கி, நெய் உருக்கி உண்ண வேண்டும் என்கிறது தமிழர் மருத்துவம்.

வாழைப்பழம் அதிக அமிலத்தைச் சரிப்படுத்தும் என்பதால், இரண்டு மூன்று வாழைப்பழங்கள் பாலுடன் சேர்த்துக்கொள்வது நல்லது. அதிலும், மஞ்சள் வாழைப்பழத்தைவிட பச்சை வாழைப்பழம் சிறந்தது.

ஒரே வேளையாக அதிகம் சாப்பிடுவதைத் தவிர்த்து, இடைவெளி விட்டுக் கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது.

அல்சர் இருப்பவர்கள் புளிப்புச்சுவை உடைய திராட்சை, ஆரஞ்சு, சாத்துக்குடி, எலுமிச்சை, பப்பாளி, அன்னாசி போன்றவற்றைத் தவிர்த்து, ஆரோக்கியமான சரிவிகித உணவைச் சாப்பிடுவது எப்போதும் நல்லது.

மது, புகை, புகையிலை வேண்டாம். இவற்றை நாடிச் செல்லும் போது உங்கள் எதிர்காலத்தை நினையுங்கள். உங்கள் பிள்ளைகளை, மனைவியை, பெற்றோரை நினையுங்கள்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...