தமிழக அரசு பள்ளிகளில் கடந்த 30.06.2009ம் தேதிக்குப் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அதற்கு முந்தைய மாதத்தில் (31.5.2009) பணி நியணம் செய்யப்பட்ட சக இடைநிலை ஆசிரியர்களுக்கும் ரூ. 14,000/- ஊதிய முரண்பாடு உள்ளதை களைய வேண்டும், சம வேலைக்கு சம ஊதியம் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மூன்று நாட்களாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் இடைநிலை ஆசிரியர்களை தமிழக அரசு, காவல்துறை மூலம் கலைந்து செல்லுமாறு மிரட்டல் விடுப்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.
உண்ணாவிரதம் இருந்த 70க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இப்பிரச்சனையின் தீவிரத்தை உணர்ந்து, நியாயமான கோரிக்கைகளுக்காக போராடும் இடைநிலை ஆசிரியர்களை உடனே அழைத்துப் பேசி சுமூகத் தீர்வு காண வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு தமிழக அரசை வலியுறுத்துகிறது.
-கே. பாலகிருஷ்ணன்
மாநிலச் செயலாளர்
