தலைமைச் செயலர்- தலைமை வழக்கறிஞர்: ஆளுநர் அவசர அழைப்பு!


காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது தமிழக அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில், பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை நடத்த தமிழக தலைமை செயலர் மற்றும் தலைமை வழக்கறிஞர் ஆகியோருக்கு ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார்.

காவிரி மேலாண்மை வாரியம் அமைப்பதற்கான காலக்கெடு முடிந்த நிலையில் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் உள்ளது. மத்திய அரசைக் கண்டித்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. நேற்று சென்னை மெரினா கடற்கரையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர். இன்று(ஏப்ரல் 1) யாரும் போராட்டத்தில் ஈடுபடாமல் இருக்க மெரினாவில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசைக் கண்டித்து அதிமுக சார்பில் ஏப்ரல் 3ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், திமுக சார்பில் இன்று அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெற்றது. இதில், பந்த் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

காவிரி விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் தொடங்கியுள்ள போராட்டங்கள் மிகப்பெரிய அளவில் பரவலாம் எனக் கருதப்படும் நிலையில், தலைமைச் செயலர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோருக்கு ஆளுநர் மாளிகையில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரும் இன்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை சந்திக்கவுள்ளனர். அப்போது காவிரி மேலாண்மை வாரியம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே, இந்த சந்திப்பு தொடர்பாக திமுக செயல் தலைவர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார். தமிழகத்தில், ஆளுநர் தனியாக ஆட்சி நடத்திக்கொண்டு இருக்கிறார் என குறிப்பிட்டுள்ள ஸ்டாலின், “முதல்வர் ஆட்சி, ஆளுநர் ஆட்சி என இரட்டை ஆட்சி தமிழகத்தில் நடைபெறுகிறது” என விமர்சித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...