சொத்து விபரம் தாக்கல் செய்யாத ஐ.பி.எஸ்.,களுக்கு வந்தது சிக்கல்!!!


புதுடில்லி : 'சொத்து விபரம் தாக்கல் செய்யாத, 515 ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு அளிக்க வேண்டாம்' என, மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.

இந்திய அரசு பணிகள் சட்டம், 1968ன் படி, போலீஸ் அதிகாரிகள், ஒவ்வொரு ஆண்டும், தங்களது அசையா சொத்து விபரங்களை அரசிடம் தாக்கல் செய்ய வேண்டும். மொத்தம் உள்ள, 3,905 ஐ.பி.எஸ்., அதிகாரிகளில், 2017 மார்ச் வரை, 3,390 பேர் மட்டுமே, தங்கள் சொத்து விபரங்களை தாக்கல் செய்துள்ளனர்.

சொத்து விபரம் தாக்கல் செய்யாத, 515 பேரில், டி.ஜி.பி., ஐ.ஜி., உள்ளிட்ட பதவிகளில் இருப்பவர்களும் உள்ளனர். அசையா சொத்து விபரம் தாக்கல் செய்யாத, ஐ.பி.எஸ்., அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க, அனைத்து மாநில அரசு களுக்கும், மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. சொத்து விபரம் தாக்கல் செய்யாத, ஐ.பி.எஸ்., அதிகாரிகளுக்கு, பதவி உயர்வு மற்றும் விஜிலன்ஸ் தடையில்லாச் சான்று வழங்கக்கூடாது என்றும், மத்திய உள்துறை அமைச்சகம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

சொத்து விபரம் தாக்கல் செய்யாத போலீஸ் அதிகாரிகளிடம், 'உரிய காலத்துக்குள் ஏன் தாக்கல் செய்யவில்லை?' என, விளக்கம் கேட்கவும், மாநில அரசுகளுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...