அரசு பள்ளிக்குப் பூட்டுப் போட்டு மாணவர்கள் போராட்டம்

விருதுநகர் மாவட்டம் திருவில்லிப்புத்தூர் அருகே சின்ன அத்திக்குளத்தில்
ஆசிரியர் உரிய நேரத்தில் பணிக்கு வராததால் அரசு பள்ளிக்கு மாணவ மாணவியரே பூட்டுப் போட்டனர். திருவில்லிப்புத்தூர் அருகே சின்ன அத்திக்குளத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. 21 மாணவர்கள் மட்டுமே உள்ள இந்தப் பள்ளியில் 5 ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர். பள்ளியின் வேலை நேரம் காலை எட்டே முக்கால் மணி முதல் மாலை 4 மணி வரையாகும்.

ஆசிரியர்கள் 11 மணிக்குத் தான் பள்ளிக்கு வருவதை அறிந்த பெற்றோர், உரிய நேரத்துக்குப் பணிக்கு வருமாறு கேட்டுக்கொண்டுள்ளனர். அதன்பின்னரும் ஆசிரியர்கள் தாமதமாகவே வந்து சென்றுள்ளனர். இந்நிலையில் இன்று காலை உரிய நேரத்தில் ஆசிரியர்கள் வராததைக் கண்டித்துப் பள்ளிக்குப் பூட்டுப் போட்டு மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...