*⌨சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு...!*
வளிமண்டலத்தில் நிலவும் காற்றழுத்த தாழ்வுநிலையால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இன்று ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:
தெலங்கானா முதல் குமரிக்கடல் வரையிலான வளிமண்டல பகுதியில் காற்றழுத்த தாழ்வுநிலை, தமிழகத்தின் உள் பகுதி வழியாக நிலவி வருகிறது. அதன் காரணமாக அடுத்து வரும் 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதற்கிடையில் சனிக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி, கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்சட்டியில் 8 செமீ, நீலகிரியில் 1 செமீ மழை பதிவாகியுள்ளது.
நேற்று மாலை 5.30 மணிக்கு எடுக்கப்பட்ட வெயில் அளவுகளின்படி, அதிகபட்சமாக கரூர் பரமத்தி வேலூர், மதுரையில் தலா 103.1, திருச்சியில் 102.02 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
இவ்வாறு சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் தெரிவித்தனர்.