இலவச இளநிலை பட்டப்படிப்புக்கு விண்ணப்பிக்க வாய்ப்பு!


இளநிலை பட்டப்படிப்பில் இலவசமாக சேர ஜூன் 1ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என சென்னை பல்கலைக்கழகம் நேற்று (ஏப்ரல் 6) அறிவித்துள்ளது.

ஏழை மாணவர்கள் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னை பல்கலைக்கழகம் 2010-2011ஆம் ஆண்டு இலவச கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி வருகிற கல்வி ஆண்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம் ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள சுயநிதி கலை அறிவியல் கல்லூரிகள், அரசு உதவிபெறும் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கலாம். இலவச சேர்க்கைக்கு விண்ணப்பிக்க ஜூன் 1ஆம் தேதி கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை பல்கலைக்கழக பதிவாளர் ராம சீனுவாசன், “சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்களில், பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய மாணவர்கள், ஆதரவற்ற மாணவர்கள், விவசாய மற்றும் கூலி வேலை செய்பவர்களின் பிள்ளைகள், முதல் தலைமுறை பட்டப்படிப்பு மாணவர்கள், கைம்பெண், கணவரால் கைவிடப்பட்ட பெண்களின் பிள்ளைகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும். விண்ணப்பிக்கும் மாணவர்களின் குடும்ப வருமானம் ரூ.2 லட்சத்திற்கு மிகாமல் இருக்க வேண்டும்.

இலவச கல்வி திட்ட விண்ணப்பத்தைச் சென்னை பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் அல்லது என்ற பல்கலைக்கழக இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை சான்றிதழ்களின் நகல்களுடன் ப்ளஸ் 2 தேர்வு முடிவு வெளியான 15 நாட்களுக்குள் பதிவாளர் அலுவலகத்தில் சமர்ப்பிக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

ப்ளஸ் 2 தேர்வு முடிவுகள் மே 16ஆம் தேதி வெளியிடப்படும் என அரசு அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...