விஷம் நீக்கும் தும்பை!


வெண்மையான மென்மையான தும்பைப் பூவில் மருத்துவக் குணங்கள் ஏராளமாக நிறைந்துள்ளன. பூ மட்டுமல்லாது இலை, செடி, தண்டு போன்றவையும் மருத்துவக் குணம் வாய்ந்தவை.

தும்பை இலைச் சாற்றை மூன்று சொட்டு மூக்கிலிட்டு உறிஞ்சித் தும்மினால் தலையில் உள்ள நீர் வெளியேறி, மண்டைக் குத்தல், மண்டை இடி இருந்தால் குணமாகும்.

தும்பை இலைச்சாறு 25 மில்லியளவு பாம்பு தீண்டியவருக்குக் கொடுக்க இரண்டு மூன்று முறை பேதியாகும். கபத்துடன் வாந்தியாகும். குளிர்ந்த உடல்சூடு அடையும். ஒருநாள் முழுவதும் பாம்பு தீண்டியவரைத் தூங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். மூன்று நாள்கள் உப்பில்லாமல் பொங்கல் செய்து கொடுக்க நஞ்சு இறங்கும். மயங்கிய நிலையில் இருந்தால் சாற்றை மூக்கிலும் விடலாம்.

தும்பை இலை, கீழா நெல்லி இலை சம அளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவில் ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து இரு வேளை குடித்துவர மாதவிலக்கு ஒழுங்காக வராமல் இருப்பவர்களுக்கு முறையான மாதவிலக்கு ஏற்படும்.

தேள் கொட்டியவருக்கு, தும்பைச்சாறு ஒரு மில்லியளவு எடுத்து சிறிது தேனுடன் கலந்து குடிக்கக் கொடுத்து, தேள் கொட்டிய கடிவாயில் தும்பை இலையை அரைத்துக் கட்ட விஷம் கீழே இறங்கும். கடுப்பும் நீங்கும்.

தும்பை இலை, குப்பைமேனி இலை, நாய்கடுகு இலை இவற்றைச் சம அளவில் எடுத்து அரைத்து உடம்பில் பூசி மூன்று மணி நேரம் கழித்து வெந்நீரில் குளித்துவர, உடலில் பூச்சிக் கடியினாலோ, வேறு சில காரணத்தாலோ ஏற்பட்ட தடிப்பு, நமைச்சல், சொறி, சிரங்கு குணமாகும்.

நஞ்சுள்ளவை நம்மைத் தீண்டிவிட்டால் தும்பை இலைச் சாறு 50 மில்லியுடன் சிறியாநங்கை இலைச்சாறு இரண்டு சொட்டு கலந்து குடிக்கக் கொடுக்க, சிறிது நேரத்தில் வாந்தியும் பேதியும் உண்டாகி விஷம் முறிந்து குளிர்ந்த உடம்பு சூடாகி ஜன்னி நீங்கும். உடம்பில் சூடு ஏறுகிறது என்றால் விஷம் முறிகிறது என்று அர்த்தம். பேதி அதிகமானால் தயிர் அல்லது எலுமிச்சைப் பழச்சாறு கொடுக்க பேதி நீங்கும். எப்போதும் தலை மட்டும் உயரத்தில் இருக்க வேண்டும் தாழ்வாக இருக்கக் கூடாது.

தும்பை இலை, உத்தாமணி இலை சம அளவாக எடுத்து அரைத்து சுண்டைக்காய் அளவு ஒரு டம்ளர் பாலில் கலந்து இருவேளை தொடர்ந்து குடித்துவர ரத்தப்போக்கு, தாமதமாகப்படுகிற மாதவிலக்கு சரியாகும்.

தும்பை இலைச் சாறு, நாகதாழி இலைச் சாறு வகைக்கு 50 மில்லி அளவு எடுத்துக் கலந்து குடிக்க கருந்தேள், செந்தேள் ஆகியவற்றின் கொடிய விஷம் இறங்கும். கடித்த இடத்தில் சிவனார் வேம்பு இலையைக் கசக்கி அழுத்தித் தேய்க்க விஷம் தானாக இறங்கும்.

தும்பைப்பூ 50 கிராம், நல்லெண்ணெய் 50 மில்லி கலந்து காய்ச்சி வடிகட்டி தலை முழுகத் தலைபாரம், நீரேற்றம் குறையும்.

தும்பை இலை, கீழா நெல்லி இலை, மஞ்சள் கரிசலாங்கண்ணி இலை சம அளவாக எடுத்து அரைத்து பாக்கு அளவு ஒரு டம்ளர் பசும்பாலில் கலந்து இரு வேளை குடித்துவர நாள்பட்ட மஞ்சள் காமாலையானாலும் குணமாகும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...