BREAKING NEWS:பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு! தீக்குளித்த இளைஞர் மரணம்..


பிரதமர் மோடி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு அருகே இளைஞர்  தீக்குளித்து மரணமடைந்துள்ளார்.


காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. இந்நிலையில், இன்று சென்னை வந்த பிரதமர் மோடிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுக, தமிழக வாழ்வுரிமை கட்சி, நாம் தமிழர் உள்ளிட்ட பல கட்சியினர் கருப்பை சட்டை அணிந்து தங்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல், சென்னை விமான நிலையத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்குனர்கள் பாரதிராஜா, அமீர், வெற்றிமாறன், கவுதமன் உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டனர். அதேபோல், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின் காவிரி மீட்பு பயணம் என்கிற தலைப்பில் நடைபயணம் மேற்கொண்டுள்ளார்.
இந்நிலையில், மோடியின் சென்னை வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஈரோடு அருகே உள்ள சித்தோடையில் வசித்து வந்த தர்மலிங்கம்(24) என்ற வாலிபர் இன்று காலை தீக்குளித்தார். வீட்டின் சுவற்றில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என சுவற்றில் எழுதி வைத்துள்ளார். பலத்த காயமடைந்த அவர் ஈரோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் சற்றுமுன்பு மரணமடைந்துள்ளார். 100 சதவீதம் தீக்காயம் அடைந்த அவரை காப்பற்ற முடியவில்லை என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் தமிழக மக்களிடையே பெரும் அதிச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...