மே-23ல் 10ம் வகுப்பு, 'ரிசல்ட்' பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள்

மே-23ல் 10ம் வகுப்பு, 'ரிசல்ட்' வெளியாகின்றன. முடிவுகள், மாணவர்கள் அளித்த, மொபைல்
போன் எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக வரும். தமிழக பள்ளிக்கல்வித் துறையின், 10ம் வகுப்பு பொதுத் தேர்வு, மார்ச்சில் துவங்கி, ஏப்., 20 வரை நடந்தது. 10.20 லட்சம் மாணவ - மாணவியர் மற்றும் தனித்தேர்வர்கள் பங்கேற்றனர்.

விடைத்தாள் திருத்தம், மே, 6ல் முடிந்தது.இதையடுத்து, மாவட்ட வாரியாக மதிப்பெண் பெற்று, இறுதி மதிப்பெண் பட்டியல் மற்றும் தேர்வு முடிவுகள் தயாரிக்கப்பட்டன. இந்தப் பணிகள், நேற்று நிறைவடைந்தன.


தேர்வு முடிவுகள், திட்டமிட்டபடி, 23ம் தேதி வெளியிடப்பட உள்ளன.மாணவர்கள் வழங்கிய, மொபைல் போன் எண்ணுக்கு, தேர்வு முடிவுகள்,எஸ்.எம்.எஸ்., ஆக, மதிப்பெண் விபரத்துடன் அனுப்பப்படும். மேலும், இணையதளத்திலும் தெரிந்து கொள்ளலாம்.


இந்த ஆண்டு, 10ம் வகுப்பு தேர்வில், தமிழ் முதல் தாள் உட்பட, அனைத்து பாடங்களுக்கான வினாத்தாள்கள் கடினமாகவே இருந்தன. இதனால், தேர்ச்சி சதவீதம், மதிப்பெண்கள் கடும் சரிவை சந்திக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும், மாணவர்களின் எதிர்காலம் கருதி, அவர்களின் தேர்ச்சியில் பிரச்னை இருக்காது எனவும், மதிப்பெண்ணில் மட்டுமே மாற்றம் இருக்கும் எனவும், தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


10ம் வகுப்பு தேர்வு முடிவுகளுக்கும், 'ரேங்கிங்' முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. தேர்வு முடிவுகளில், மாநில, மாவட்ட வாரியாக, முதல் மூன்று இடங்களை பெற்றவர்கள் விபரங்கள் இடம் பெறாது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...