எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு கடந்த மார்ச் மாதம் 16-ந்தேதி முதல் ஏப்ரல் 20-ந்தேதி வரை நடந்தது.
இந்த தேர்வை 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவ-மாணவிகளும், தனித்தேர்வர்கள் 36 ஆயிரத்து 649 பேரும் எழுதினார்கள். தேர்வு முடிவு இன்று (புதன்கிழமை) காலை 9.30 மணிக்கு இணையதளங்கள் மூலம் வெளியிடப்படுகிறது.
www.tnr-esults.nic.in , www.dge1.tn.nic.in , www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தேர்வர்கள் தங்களது பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து தேர்வு முடிவுகளை மதிப்பெண்களுடன் அறிந்துகொள்ளலாம்.
மேலும், ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட கலெக்டர் அலுவலகங்களில் இயங்கும் தேசிய தகவலியல் மையங்களிலும், அனைத்து மைய மற்றும் கிளை நூலகங்களிலும் கட்டணமின்றி தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் பயின்ற பள்ளிகளிலும் மதிப்பெண்களுடன் தேர்வு முடிவுகளை அறிந்துகொள்ளலாம். மாணவர்கள் தங்கள் பள்ளிகளில் சமர்ப்பித்த செல்போன் எண்ணுக்கும், தனித்தேர்வர்களுக்கு விண்ணப்பிக்கும்போது வழங்கிய செல்போன் எண்ணுக்கும் குறுஞ்செய்தி மூலமும் தேர்வு முடிவு அனுப்பப்படும்.
28-ந்தேதி முதல் பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளி தலைமையாசிரியர்கள் வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமைய தலைமையாசிரியர்கள் வழியாகவும் தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளலாம். 28-ந்தேதி முதல் www.dge.tn.nic.in என்ற இணையதளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
விடைத்தாள்களின் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 24-ந்தேதி முதல் 26-ந்தேதி மாலை 5.45 மணி வரை பள்ளி மாணவர்கள் தங்கள் பள்ளி வழியாகவும், தனித்தேர்வர்கள் தாங்கள் தேர்வெழுதிய தேர்வுமையம் வழியாகவும் விண்ணப்பிக்க வேண்டும்.
துணைப் பொதுத்தேர்வு ஜூன் 28-ந்தேதி முதல் நடைபெறவுள்ளது. இத்தேர்விற்கு விண்ணப்பிக்கும் முறை குறித்து விரைவில் தனியே அறிவிப்பு வெளியிடப்படும்.
இந்த தகவலை அரசு தேர்வுகள் இயக்குனர் தண்.வசுந்தராதேவி தெரித்துள்ளார்.