குரூப் 2ஏ தேர்வு: சான்றிதழ் பதிவேற்ற நாளை மறுநாள் கடைசி!!!

குரூப் 2ஏ தேர்வுக்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வரும் வெள்ளிக்கிழமை
(மே 4) கடைசி நாளாகும். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய வரலாற்றில் முதன் முறையாக சான்றிதழ் சரிபார்ப்புப் பணியானது ஆன்-லைனில் முறையில் நடைபெறுகிறது.

இதற்கான சான்றிதழ் பதிவேற்றம் செய்ய வரும் வெள்ளிக்கிழமை கடைசியாகும். ஆன்-லைன் வழியாக சான்றிதழ் சரிபார்க்கும் புதிய நடைமுறை குரூப் 2ஏ தேர்வில் இருந்து நடைமுறைக்கு வந்துள்ளது. இதற்காக சான்றிதழ் பதிவேற்றும் பணிகள் கடந்த 23-ஆம் தேதியில் இருந்து தொடங்கின.
இந்நிலையில், சான்றிதழ் பதிவேற்றம் வரும் வெள்ளிக்கிழமை நிறைவடைகிறது. அரசு கேபிள் தொலைக்காட்சி நிறுவனம் நடத்தும் அரசு இணைய சேவை மையங்கள் மூலமாக தேர்வர்கள் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து வந்தனர்.
இதற்காக ஒரு சான்றிதழ்
ஸ்கேன் செய்து பதிவேற்றம் செய்ய ரூ.5 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...