பிளஸ் 2 சிறப்பு துணைத் தேர்வு: நாளை முதல் விண்ணப்பிக்கலாம்!!

பிளஸ் 2 சிறப்புத் துணைத் தேர்வுக்கு
புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. விண்ணப்பிக்க ஜூன் 2 கடைசி நாளாகும்*

*இதுகுறித்து அரசுத் தேர்வுகள் இயக்குநர் அலுவலகம் வெளியிட்ட செய்தி*

*கடந்த மார்ச் -ஏப்ரலில் நடைபெற்ற பிளஸ் -2 பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்காக, ஜூன் 25 -ஆம் தேதி முதல் ஜூலை 4 -ஆம் தேதி வரை சிறப்பு துணைத் தேர்வு நடத்தப்படுகிறது*

*இந்தத் தேர்வில் பங்கேற்க விரும்பும் பள்ளி மாணவர்கள், தாங்கள் படித்த பள்ளிகள் மூலமாகவும், தனித்தேர்வர்கள் அவர்கள் தேர்வெழுதிய தேர்வு மையங்கள் மூலமாகவும் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்*

*இதற்கு புதன்கிழமை முதல் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க ஜூன் 2 கடைசி நாளாகும். தனியார் இணைய சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க இயலாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது*

*🔴🔴தேர்வுக் கட்டணம்*

*இந்த சிறப்பு துணைத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் ஒரு பாடத்துக்கு ரூ. 50 வீதமும், இதர கட்டணமாக ரூ. 35 சேர்த்தும் பணமாக மட்டுமே செலுத்த வேண்டும்*

*தேர்வறை அனுமதிச் சீட்டை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்துகொள்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும். அந்த அனுமதிச் சீட்டில் தேர்வு மைய விவரம் இடம்பெற்றிருக்கும் எனவும் அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது*

*🔴🔴சிறப்பு துணைத் தேர்வு அட்டவணை*

ஜூன் 25 - மொழிப் பாடம் தாள் -1

ஜூன் 26 - மொழிப் பாடம் தாள் -2

ஜூன் 27 - ஆங்கிலம் முதல் தாள்

ஜூன் 28 - ஆங்கிலம் இரண்டாம் தாள்

ஜூன் 29 - வேதியியல், கணக்குப் பதிவியல், புவியியல
ஜூன் 30 - கணிதம், விலங்கியல், நுண் உயிரியல், ஊட்டச்சத்து மற்றும் உணவுக் கட்டுப்பாடு, வணிகவியல், செவிலியர் (தொழில் பிரிவு), செவிலியர் (பொது), ஜவுளி மற்றும் ஆடை வடிவமைப்பு, வேளாண் செயல்பாடுகள், உணவு மேலாண்மை மற்றும் குழந்தை பராமரிப்பு.

ஜூலை 2 - தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய கலாசாரம், கணினி அறிவியல், உயிரி வேதியியல், அட்வான்டு மொழிப் பாடம் (தமிழ்), மனை அறிவியல், புள்ளியியல், அரசியல் அறிவியல்.
ஜூலை 3 - உயிரியல், வரலாறு, தாவரவியல், வர்த்தக கணிதம், கணக்குப் பதிவியல் மற்றும் கணக்காய்வு, அலுவலக மேலாண்மை

ஜூலை 4 - இயற்பியல், பொருளாதாரம், பொது இயந்திரப் பணியாளர், மின்னணுவியல் உபகரணங்கள், கட்டட வரைபடளாளர், மின் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்கள், தானியங்கி இயந்திரங்கள், ஜவுளி தொழில்நுட்பம்.




SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...