ட்ரோன்: சீனா கின்னஸ் சாதனை!


சீனாவைச் சேர்ந்த பிரபல ட்ரோன் தயாரிப்பு நிறுவனம், ஒரே நேரத்தில் 1,374 ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) பறக்கவிட்டு கின்னஸ் சாதனை படைத்துள்ளது.

சீனாவைச் சேர்ந்த ட்ரோன் தயாரிப்பு நிறுவனம் கடந்த செவ்வாய்க்கிழமை (மே 1) சியான் நகரில் ஒரே நேரத்தில் 1,374 ட்ரோன்களை 13 நிமிடங்கள் பறக்கவிட்டது. வண்ண விளக்குகளுடன் வானில் பறந்த ட்ரோன்களை லட்சக்கணக்கான மக்கள் கண்டு ரசித்தனர். இந்த நிகழ்வு முன்பிருந்த கின்னஸ் உலக சாதனையை முறியடித்துள்ளது.

ஏற்கெனவே, குளிர்கால ஒலிம்பிக் போட்டியின்போது 1,218 ட்ரோன்களை தென்கொரியா பறக்கவிட்டதும், அமெரிக்க நிறுவனம் ஒன்று 156 ட்ரோன் விமானங்களைப் பறக்கவிட்டதும் சாதனையாக இருந்தது. அந்த சாதனையை தற்போது சீனா முறியடித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...