தூத்துக்குடியில் மீண்டும் இணைய சேவை


தூத்துக்குடி: தூத்துக்குடியில் நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் இணைய சேவை துவங்கியது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தை தொடர்ந்து, தூத்துக்குடி, நெல்லை, குமரி மாவட்டங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஐகோர்ட் மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டது. இதனையடுத்து நெல்லை மற்றும் குமரியில் மீண்டும் இணைய சேவை வழங்கப்பட்டது.

இந்நிலையில், தூத்துக்குடியில் அமைதி திரும்பியதையடுத்து 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. தொடர்ந்து நள்ளிரவு 12 மணி முதல் மீண்டும் தூத்துக்குடியில் இணைய சேவை துவங்கப்பட்டது.

தூத்துக்குடியில் இயல்புநிலை திரும்ப பொதுமக்கள் அனைவரும் ஒத்துழைப்பு தர வேண்டும் என டி.ஜி.பி., டி.கே.ராஜேந்திரன் கேட்டுக் கொண்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...