பள்ளி கல்வி துறையில் அதிரடி மாற்றம் : சி.இ.ஓ.,க்களுக்கு கூடுதல் அதிகாரம்

சென்னை: தமிழக பள்ளிக்கல்வித் துறையில், மாவட்ட நிர்வாக முறையில், அதிரடி
மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, கூடுதல் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வித் துறையின் சார்பில், புதிய அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாவட்ட அளவிலான நிர்வாகத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுஉள்ளது. அனைத்து மாவட்டங்களிலும் உள்ள, தொடக்க கல்வி அதிகாரி, மெட்ரிக் ஆய்வாளர் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி ஆய்வாளர் அனைவரும், மாவட்ட கல்வி அதிகாரி பதவி நிலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். மேலும், மாவட்டங்களில் பணியாற்றும், தொடக்க கல்வி உதவி அதிகாரிகள், வட்டார கல்வி அதிகாரி பதவி நிலைக்கு மாற்றப்படுகின்றனர். இதுவரை, ஒவ்வொரு மாவட்டத்திலும், தொடக்கப் பள்ளிகளை மட்டும் கவனித்த, டி.இ.இ.ஓ., எனும் மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி, இனி, தன் மாவட்டத்தில் உள்ள, அனைத்து மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் நிர்வாகத்தையும் கவனிப்பார்.அதேபோல், ஆங்கிலோ இந்தியன் மற்றும் மெட்ரிக் ஆய்வாளர்களும், மாவட்ட கல்வி அதிகாரிகளாக பதவி உயர்த்தப்பட்டு, தங்கள் எல்லையில் உள்ள அனைத்து வகை பள்ளிகளின் நிர்வாகத்தையும் கவனிப்பர். மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, அதிகாரம் கூடுதலாக்கப்பட்டு, அனைத்து வகை தொடக்க, பள்ளிக் கல்வி மற்றும் மெட்ரிக் பள்ளிகளின் நிர்வாகங்களை கவனிக்க வேண்டும் என, உத்தரவிடப்பட்டுள்ளது. மொத்தம், 16 பக்கம் உடைய இந்த அரசாணையில், ஒவ்வொரு வகை பள்ளிகளின் அதிகாரிகளுக்கும், புதிதாக பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
பதவி உயர்வு : பள்ளிக் கல்வி இணை இயக்குனருக்கு, இயக்குனராக பதவி உயர்வு வழங்கப்பட்டுள்ளது.பள்ளிக் கல்வித் துறையில், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன, இணை இயக்குனர் லதா, இயக்குனராக பதவி உயர்த்தப்பட்டுஉள்ளார். இவர், முறைசாரா கல்வி திட்ட இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...