வேலைவாய்ப்பு: எஸ்பிஐ வங்கியில் பணி!


பாரத ஸ்டேட் வங்கியில் (எஸ்பிஐ) காலியாக உள்ள அதிகாரி பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணியிடங்கள்: 13

கல்வித் தகுதி: எம்பிஏ, பிஜிடிஎம், மார்க்கெட்டிங், மாஸ் மீடியா, நிதியியல், வணிகவியல் துறையில் முதுகலை பட்டம் மற்றும் பணி அனுபவமும் பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை: நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.600/-

விண்ணப்பிக்கும் முறை: www.sbi.co.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசித் தேதி: 02.06.2018

மேலும் விவரங்களுக்கு எஸ்பிஐ அல்லது https://www.sbi.co.in/webfiles/uploads/files/1526299849420SBISCO_English.pdf என்ற இணையதள முகவரியைப் பார்த்துத் தெரிந்துகொள்ளவும்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...