எடியூரப்பா பதவியேற்க தடையில்லை; சுப்ரீம் கோர்ட் அறிவிப்பு


புதுடில்லி : எடியூரப்பா பதவியேற்புக்கு தடை விதிக்க, சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்துள்ளது. இதனையடுத்து இன்று(மே-17) காலை கர்நாடகாவின் முதல்வராக எடியூரப்பா பதவி ஏற்கிறார்.

வாதத்தின் போது ரோஹத்கி தெரிவிக்கையில், 'காங்., மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும். கவர்னரை அவரது பணியை செய்ய விடுங்கள். அவர் வேலைகளில் தலையிட வேண்டாம். ஆட்சியமைக்க அழைப்பது கவர்னரின் கடமை. கவர்னரும், ஜனாதிபதியும் எந்த நீதிமன்றத்துக்கும் பதில் சொல்லத் தேவையில்லை. கவர்னர் கடமையாற்றுவதை தடுத்துவிட்டால் எந்த சட்டமும் இயற்றப்பட்டது' என்றார்.

இதனை தொடர்ந்து, நீதிபதிகள் நீண்ட ஆலோசனைக்கு பின், எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க மறுப்பு தெரிவித்தனர். மேலும் அனைத்து தரப்புக்கும் நோட்டீஸ் அளித்து, முழுமையான விசாரணை நடத்தப்படும் எனவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இதனையடுத்து இன்று காலை 9 மணிக்கு கர்நாடகாவில் எடியூரப்பா பதவியேற்க உள்ளார்.

இதனை தொடர்ந்து வாதாடிய காங்., வக்கீல் சிங்வி, பதவியேற்பை மாலை 4.30 மணி வரை தள்ளி வைக்க வேண்டும் என வாதாடி வருகிறார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...