Flash News: நீட் தேர்வு எழுத வெளிமாநிலம் செல்லும் மாணவர்களுக்கு தமிழக அரசு நிதி உதவி!!!

நீட் தேர்வு எழுத வெளி மாநிலங்களுக்கு செல்லும் தமிழக மாணவர்களுக்கு அரசு செலவில் அழைத்து
செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. மாவட்ட கல்வி முதன்மை அலுவலர்கள் மூலம் ரூ.1000 நிதி உதவி வழங்கபடும் என்று தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வுக்காக நுழைவுத் சீட்டு, அடையாள அட்டையை காட்டி மாணவர்கள் பெற்றுக் கொள்ளலாம் என்று சென்னையில் நடைபெற்ற முதலமைச்சர் தலைமையிலான ஆலோசனைக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது நீட் தேர்வு எழுதும் தமிழக மாணவர்களுக்கு ராஜஸ்தான், கேரளா போன்ற வெளிமாநிலங்களில் மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. நாளை மறுதினம் காலை 8.30 மணிக்க நீட் தேர்வு தொடங்க உள்ள நிலையில், நாளைக்கே நீட் தேர்வு எழுதும் மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு செல்ல வேண்டியது கட்டாயம். ஆகையால் தற்போது தமிழக அரசு மாணவர்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...