சமூக வலைதளத்தில் வதந்தி: 10 ஆண்டு சிறை!


சவுதி அரேபியாவில் சமூக வலைதளத்தில் தவறான தகவல்களைப் பதிவிட்டவருக்கு நேற்று (மே 31) 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது அந்நாட்டு நீதிமன்றம்.

ஐக்கிய அரபு நாட்டைச் சேர்ந்த மனித உரிமை ஆர்வலர் அகமது மன்சூர், சமூக வலைதளத்தில் அரபு நாட்டின் அரசையும் அரசியல் தலைவர்களையும் தவறான, வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான தகவல்களை பரப்பியதாகக் குற்றம்சாட்டி, அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

வழக்கை விசாரித்த அபுதாபி நீதிமன்றம், மன்சூர் தனது தவறான பதிவுகளின் மூலம் ஐக்கிய அரபு நாட்டையும் அதன் கவுரவத்தையும் அரசியல் தலைவர்களையும் இழிவுபடுத்திவிட்டதாகக் கூறி அவருக்குத் தண்டனை வழங்கியது.

இதையடுத்து, அகமது மன்சூருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.1.83 கோடி அபராதமும் விதித்து அபுதாபி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...