ஒவ்வொரு வாய்தாவுக்கும் 10 ஆயிரம் அபராதம்!


ஒரு வழக்கின் விசாரணையில் தொடர்ந்து வாய்தா கேட்பதை தவிர்க்க ஒவ்வொரு வாய்தாவுக்கும் உச்ச நீதிமன்றம் 10 ஆயிரம் அபராதம் கட்ட வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலத்திலுள்ள பாட்டியாலாவில் நிலங்கள் யாருக்கு சொந்தம் என்ற பிரச்சினையை முன்வைத்து ஒரு சிவில் வழக்கு 10 ஆண்டுகளாக அந்த மாவட்டத்திலுள்ள நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கு முறையீடுக்காக அந்த மாநிலத்தின் உயர் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது. உயர் நீதிமன்றத்திலும் தீர்வுக்கு வராததால் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு வழக்காக தாக்கல் செய்யப்பட்டது.

உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி மதன் பி லோகுர் தலைமையிலான அமர்வின் முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி லோகுர் கூறுகையில், மனுதாரர் சுரிந்தர் கவுர் 89 வயதானவர். அவர் முதுகு தண்டுவட காச நோயால் பாதிக்கப்பட்டுள்ளார் என உயர் நீதிமன்றத்தின் ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அப்படியிருக்கும்போது இந்த வழக்கு 10 ஆண்டுகளாக நடந்து வருவதை அவர் எப்படித்தாங்கிக் கொள்வார்?. இந்த வழக்கில் அடிக்கடி வாய்தா வாங்குவது ஏதோ நோக்கத்துடன்தான் என்பது தெரிய வருகிறது எனத் தெரிவித்த நீதிபதி, மனுதாரரின் நோயினால் அவர் வர முடியாத பட்சத்தில்,அதைப் பயன்படுத்திக் கொண்டு எக்ஸ்-பார்ட்டியாக வழக்கை முடிக்க முயற்சிக்கிறார். அதற்காகவே அவர் வழக்கை நீட்டிக்க வாய்தா கேட்கிறார் எனத்தெரிகிறது. இனி வாய்தா வாங்கினால் ஒவ்வொரு வாய்தாவுக்கும் 10 ஆயிரம் அபராதத்தை எதிர் மனுதாரர் கட்ட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிடுகிறது எனத் தெரிவித்துள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...