17 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக சத்யநாராயணாவை நியமித்தது சுப்ரீம் கோர்ட்


எடப்பாடி பழனிசாமியை முதல்-அமைச்சர் பதவியில் இருந்து நீக்க கோரி டி.டி.வி. தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் கடந்த ஆண்டு கவர்னரிடம் மனு அளித்தனர்.

இதனால், கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகர் ப.தனபாலிடம் அரசு தலைமை கொறடா ராஜேந்திரன் புகார் செய்தார். இதைத்தொடர்ந்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு 19 எம்.எல்.ஏ.க்களுக்கும் சபாநாயகர் உத்தரவிட்டார்.

ஆனால் அவர்களில் ஜக்கையனை தவிர மற்ற எம்.எல்.ஏ.க்கள் விளக்கம் அளிக்கவில்லை. எனவே வெற்றிவேல், தங்க தமிழ்செல்வன் உள்ளிட்ட 18 பேரை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து 18 எம்.எல்.ஏ.க்களும் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். பின்னர் இந்த வழக்கு தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி, நீதிபதி எம்.சுந்தர் ஆகியோர் தலைமையிலான அமர்வுக்கு மாற்றப்பட்டு, கடந்த 14-ந்தேதியன்று வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

18 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்து சபாநாயகர் பிறப்பித்த உத்தரவு செல்லும் என்று தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜியும், செல்லாது என்று நீதிபதி எம்.சுந்தரும் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியதால், இந்த வழக்கு 3-வது நீதிபதியின் விசாரணைக்கு மாற்றப்பட்டது. வழக்கை விசாரிக்கும் 3-வது நீதிபதியாக நீதிபதி விமலா நியமிக்கப்பட்டார்.

இந்த சூழ்நிலையில், தங்க தமிழ்செல்வன் தவிர மற்ற 17 பேர் சார்பில் கடந்த வாரம் சுப்ரீம் கோர்ட்டில் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்களில், சென்னை ஐகோர்ட்டு இந்த வழக்கை விசாரித்தால் மேலும் தாமதம் ஆகும் என்பதால், சுப்ரீம் கோர்ட்டே இந்த வழக்கை விசாரித்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு உள்ளது.

இந்நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, சஞ்சய் கிஷன் கவுல் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வு முன்பு மனுதாரர்கள் சார்பில் மூத்த வக்கீல் விகாஸ் சிங் ஆஜராகி, 17 பேரின் மனுக்களையும் அவசர வழக்காக கருதி விசாரிக்க வேண்டும் என்று முறையிட்டார்.

அவரது கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், இன்று வழக்கு  விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று கூறினர்
அதன்படி இந்த  வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது   17 எம்.எல்.ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் அதிரடி திருப்பமாக 3-வது நீதிபதியாக சத்யநாராயணாவை நியமித்தது உத்தரவிடபட்டு உள்ளது. நீதிபதி விமலாவுக்கு பதில் சத்யநாராயணா விசாரிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டு உள்ளது. எம்.எல்.ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் 3 வது நீதிபதியே இறுதி முடிவு எடுப்பார் என உத்தரவிட்டது.

3ஆவது நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டை தகுதிநீக்க எம்.எல்.ஏக்கள் திரும்பப்பெற வேண்டும். எந்தவொரு நீதிபதி மீதும் இதுபோன்ற குற்றச்சாட்டுகளை சுமத்துவது சரியாக இருக்காது  என சுப்ரீம்  கோர்ட் அறிவுரை வழங்கியது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...