பிளஸ் 1 விடைத்தாள் நகல்: இன்று முதல் பதிவிறக்கம் செய்யலாம்

பிளஸ் 1 விடைத்தாள் நகலை செவ்வாய்க்கிழமை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத் துறை இயக்குநர்
தண்.வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ் 1 பொதுத்தேர்வெழுதி விடைத்தாள்களின் நகல் கோரி விண்ணப்பித்த தேர்வர்கள் செவ்வாய்க்கிழமை பிற்பகல் 2 மணி முதல் scan.tndge.in  என்ற இணையதளத்தில் தங்களது பதிவெண், பிறந்த தேதியைப் பதிவு செய்து தாங்கள் விண்ணப்பித்த பாடங்களுக்குரிய விடைத்தாள்களின் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விடைத்தாள்களின் நகலைப் பதிவிறக்கம் செய்த பிறகு மறுகூட்டல் அல்லது மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதே இணையதள முகவரியில் Application for Retotalling/Revaluation என்ற தலைப்பினை கிளிக்' செய்து தாங்கள் விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்து, இரு நகல்கள் எடுத்து ஜூன் 20 -ஆம் தேதி முதல் 22 -ஆம் தேதி வரை காலை 10 மணி முதல் மாலை 6 மணிக்குள் தொடர்புடைய முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும். மறுகூட்டல், மறுமதிப்பீட்டுக்கான கட்டணத்தை முதன்மைக் கல்வி அலுவலகத்தில் பணமாகச் செலுத்த வேண்டும் என அரசுத் தேர்வுத் துறை இயக்குநர் தண்.வசுந்தராதேவி திங்கள்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...