கலந்தாய்வுக்கு கட்டுப்பாடு: ஆசிரியர்கள் புறக்கணிப்பு!!!

ராமநாதபுரத்தில் துவக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு மாவட்டம் விட்டு மாவட்டம்
கலந்தாய்வுக்கு இயக்குனர் கட்டுப்பாடு விதித்ததால், ஆசிரியர்கள் கலந்தாய்வை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். ராமநாதபுரம் புனித அந்திரேயா பள்ளியில் துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கான மாவட்டம் விட்டு மாவட்ட பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வு நேற்று நடந்தது.

இந்த கலந்தாய்வில், ஆசிரியர்கள் பற்றாக்குறையை காரணம் காட்டி, சேலம், கிருஷ்ணகிரி, திருப்பூர், திருவண்ணாமலை, தர்மபுரி, வேலுார், ஈரோடு, விழுப்புரம், காஞ்சிபுரம் உட்பட 9 மாவட்டங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள் வெளி மாவட்டங்களுக்கு செல்ல அனுமதிக்கவில்லை.

 இந்த 9 மாவட்ட காலி பணியிடங்கள் தவிர பிற மாவட்ட காலி இடங்கள் காண்பிக்கப்படவில்லை. இதனால் ஆசிரியர்கள் இந்த ஒன்பது மாவட்டங்களுக்கு மட்டுமே மாறுதல் பெற்றுக்கொள்ளக்கூடிய நிலை உருவானது. இதையடுத்து ராமநாதபுரத்தில் மாவட்ட மாறுதலுக்கு விண்ணப்பித்திருந்த 168 ஆசிரியர்கள் கலந்தாய்வில் பங்கேற்காமல் புறக்கணிப்பு செய்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...