ஒரே அறையில் தொடக்கப்பள்ளி நடத்தும் எச்.எம்.



*ஆத்துார்: ஒரே வகுப்பறையில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரை, மாணவர்களுக்கு, தலைமைஆசிரியை மட்டும் பாடம் நடத்துகிறார்*

*🌐இடைநிலை ஆசிரியை, ஓராண்டுக்கு மேல் பணிக்கு வராததால், பெற்றோர், தங்கள் குழந்தைகளை வேறு பள்ளிகளில் சேர்க்க, டி.சி., கேட்டு வருகின்றனர்*

*🌐சேலம் மாவட்டம், ஆத்துார் அருகே, நரசிங்கபுரம் காலனியில், ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது*

*🌐அங்கு, இரு கான்கிரீட், ஒரு ஓட்டு வில்லை என, மூன்று கட்டடங்களில், ஆறு வகுப்பறைகள் உள்ளன. ஓட்டு வில்லை கட்டடம் சிதிலமடைந்து, பயன்படுத்த முடியவில்லை. ஒரு கான்கிரீட் கட்டடத்தை, உதவி தொடக்க கல்வி அலுவலக குடோனாக பயன்படுத்துகின்றனர்*

*🌐இரு ஆசிரியர் பள்ளியான இங்கு, தற்போது தலைமையாசிரியை சாந்தி மட்டும் உள்ளார். அவர், ஒரே வகுப்பறையில், ஒன்று முதல், ஐந்தாம் வகுப்பு வரையுள்ள மாணவர்களை அமர வைத்து, பாடம் நடத்துகிறார். மற்றொரு வகுப்பறை பூட்டப்பட்டுள்ளது.இடைநிலை ஆசிரியை ஜாய் கெம்பீரம், 2008 முதல், இங்கு பணிபுரிந்து வந்தார்*

*🌐அவர், சரியாக பாடம் நடத்தாததோடு, வகுப்பறையில் துாங்குவது, மாணவர்களை திட்டி அடிப்பது உள்ளிட்ட செயல்களில் ஈடுபட்டார்*

*🌐இதுகுறித்து, பெற்றோர் அளித்த புகார்படி, கல்வி அதிகாரிகள் ஆய்வு செய்தபோது, 2017 ஜூன், 9ல், அவரை, 'சஸ்பெண்ட்' செய்து உத்தரவிட்டனர்.தற்போது, ஆசிரியர் பணி நிரவலில், நரசிங்கபுரம் காலனி பள்ளிக்கு, ஆசிரியர் நியமிக்கப்படவில்லை.இங்கு, 2016ல், 49 பேர், 2017ல், 33 பேர் படித்தனர். தற்போது, 23 மாணவர்கள் மட்டுமே உள்ளனர்*

*🌐நடப்பாண்டு, முதல் வகுப்பில், ஒரு மாணவி மட்டும் சேர்ந்தார். மூன்றாம் வகுப்பில் ஒருவரும் இல்லை. ஆசிரியர் இல்லாததால், ஆறு பேர், மாற்றுச்சான்றிதழ் பெற்றுச் சென்றனர். மற்ற மாணவர்களின் பெற்றோர், ஒரு ஆசிரியர் மட்டுமே உள்ளதால், மாற்றுச்சான்றிதழ் கேட்டு வருகின்றனர்*

*🌐பெற்றோர் கூறுகையில், 'கடந்த மார்ச்சில், சேலம் வந்த முதல்வரிடம்,இடைநிலை ஆசிரியர், ஓராண்டாக பணிக்கு வராததால், நிரந்தர உதவி ஆசிரியர் நியமிக்க மனு வழங்கினோம். 'அதற்கு, நடவடிக்கை எடுப்பதாக, ஏப்., 6ல், மாவட்ட தொடக்க கல்வி அலுவலர் தபால் அனுப்பினார். ஆனால், இதுவரை ஆசிரியர் நியமிக்காததால், மாணவர்களை சேர்க்கவில்லை' என்றனர்*

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...