வாய்வு தொல்லையில் இருந்து விடுபட இந்த வழியை பின்பற்றுங்கள்...!


வாய்வு தொல்லை சில நேரங்களில் தர்ம சங்கடமான சூழலை உருவாக்கிவிடும். வெளியேறும் வாய்வில் நாற்றம் இல்லாதவரை நமது உடலில் எந்த பிரச்சனையும் இல்லை என்று எடுத்துக்கொள்ளலாம். ஆனால் நாற்றம் இருந்தால், அதனை சரி செய்யவேண்டியது அவசியம்.
பலரும் பயப்படும் ஒரு பிரச்சினை. ‘சாதாரண வாயுத் தொல்லைதான்,’ என கோலிசோடா கூட்டுப்பெருங்காயம் என சாப்பிட்டு, தடாலடியாக வலியின் தீவிரம் கூடி மாரடைப்பு ஏற்பட்டு மரணத்தின் வாசலுக்குச் செல்வோரும் உண்டு.
சீரகம், ஏலக்காய், பச்சைக் கற்பூரம் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து பொடி செய்து காலை, மதியம், இரவு என மூன்று வேலையும் சக்கரையோடு சேர்த்து உண்டு வந்தால் வாயு தொல்லை நீங்கும்.
காலை வேளை உணவைப் பெரும்பாலோர் தவிர்ப்பதோ அல்லது அக்கறையின்றி அவசர உணவாகவோ எடுப்பதோ பெருகி வருகிறது. இரவெல்லாம் வெற்றுக் குடலுடன் இருந்த உடலுக்கு காலையில் உடல் பித்தத்தை குறைக்கும்படியான குளிர்ச்சியான உணவு அவசியம்.
அதிக காரத்தை தவிர்த்துவிடுங்கள். மிளகாய் வற்றல் பயன்படுத்தவேண்டிய இடங்களில் மிளகு பயன்படுத்திப்பழகுங்கள். எண்ணெய்யில் பொரித்த உணவை கூடிய மட்டும் தவிர்ப்பது நல்லது. சரியான வேளையில் உணவை எடுக்கத் தவறாதீர்.
சுக்கு, மிளகு, திப்பிலி, சீரகம், பெருஞ்சீரகம், ஏலம், பெருங்காயம், கறிவேப்பிலை சமபங்கு, இந்துப்பு பாதிபங்கு எடுத்து லேசாக வறுத்து பொடியாக்கி, சூடான உணவில் முதலில் பருப்பு பொடி போல் போட்டு சாப்பிட்டால் அஜீரணம் வராது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...