நெட் தேர்வு: ஹால்டிக்கெட் வெளியீடு!


2018 ஆம் ஆண்டு நெட் தேர்வுக்கான ஹால் டிக்கெட் இன்று(ஜூன் 22) சிபிஎஸ்இ இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் உதவிப் பேராசிரியர் பணி மற்றும் உயர் கல்வி நிறுவனங்களில் இளநிலை ஆராய்ச்சி உதவித் தொகை பெறுவதற்காக ஆண்டுக்கு இரண்டு முறை தேசிய அளவிலான நெட் தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அதன்படி, இந்தாண்டுக்கான நெட் தேர்வு வரும் ஜுலை 8ஆம் தேதி நடைபெறுகிறது.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய நான்கு நகரங்களில் இந்த தேர்வு நடக்கவுள்ளது.

இந்தாண்டில் இரண்டு தாள்கள் மட்டுமே. மேலும், தேர்வு நேரம் மூன்று மணி நேரமாக குறைக்கப்பட்டது. முதல் நாளில் பொதுஅறிவு வினாக்கள் கேட்கப்பட்டிருக்கும். இதில், 50 கேள்விகள் கேட்கப்பட்டிருக்கும். ஒரு கேள்விக்கு 2 மதிப்பெண்கள். இதற்கு ஒரு மணி நேரம் அவகாசம் வழங்கப்படும்.

இரண்டாம் தாளில் குறிப்பிட்ட பாடம் சம்பந்தப்பட்ட கேள்விகள் இடம்பெறும். இதில்,கேட்கப்பட்டிருக்கும் 100 கேள்விகளுக்கு கட்டாயம் பதிலளிக்க வேண்டும். இதற்கு,இரண்டு மணி நேரம் அவகாசம் வழங்கப்படும்.

இந்நிலையில், நெட் தேர்வுக்கான ஹால்டிக்கெட் சிபிஎஸ்இயின் www.cbse.nic.in  என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இதில்,ஏதாவது தவறு இருந்தால், தேர்வுக் குழுவை தொடர்பு கொண்டு திருத்தி கொள்ளலாம்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...