சென்னைப் பல்கலை. தொலைநிலைக் கல்வி தோ்வுகள் ஒத்திவைப்பு

சென்னை: ரமலான் பண்டிகையை முன்னிட்டு சென்னைப் பல்கலைக்கழக தொலைநிலைக் கல்வி
நிறுவனம் சார்பில் ஜூன் 16 (சனிக்கிழமை) நடத்தப்பட இருந்த தோ்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பல்கலைக்கழகம் வெளியிட்ட செய்தி,

இஸ்லாமியா்களின் ரமலான் பண்டிகை வருகிற ஜூன் 16-ம் தேதி கொண்டாடப்படுகிறது.

 இதையொட்டி, அன்றைய தினம் நடத்தப்பட இருந்த தொலைநிலைக் கல்வி நிறுவன இளநிலை, முதுநிலை மற்றும் தொழில் படிப்புகளுக்கானத் தோ்வுகள் ஜூலை 29-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது
மற்ற தோ்வுகள் ஏற்கெனவே அறிவிக்கப்பட்ட தேதிகளில் திட்டமிட்டபடி நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...