டவர்களை விற்பனை செய்த ஐடியா!


ஐடியா நெட்வொர்க் நிறுவனம் தனது 9,900 டவர்களை ரூ.4,000 கோடி விலைக்கு அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்துள்ளது.

ஐடியா நெட்வொர்க் நிறுவனத்தின் கிளை நிறுவனமான ஐசிஐஎஸ்எல் நிறுவனத்துக்குச் சொந்தமான மொபைல் டவர்களை அமெரிக்காவின் டவர் கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்தியக் கிளைக்கு முழுவதும் விற்பனை செய்வதற்கான ஒப்பந்தம் போடப்பட்டிருந்தது. இதன்படி, ரூ.4,000 கோடிக்கு ஐடியாவின் 9,900 மொபைல் டவர்கள் முழுவதும் விற்பனை செய்யப்பட்டுவிட்டதாக ஐடியா நிறுவனம் தனது அதிகாரபூர்வ அறிவிப்பில் உறுதி செய்துள்ளது. இதன் மூலம் ஐடியா நிறுவனம் இந்தியாவில் தனது டவர் தொழிலின் முழு பங்கையும் அமெரிக்க நிறுவனத்துக்கு விற்றுள்ளது.

இந்த அமெரிக்கன் டவர் கார்ப்பரேஷன் நிறுவனம் முன்னதாக வோடஃபோனிடம் இருந்த டவர்களை ரூ.3,850 கோடிக்கு வாங்கியிருந்தது. இதன் மூலம் அந்நிறுவனத்தின் டவர் எண்ணிக்கை 10,200 ஆக அதிகரித்துள்ளது. ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் கடன் சுமையைக் குறைக்கும் நோக்கத்தில்தான் தங்களிடமிருந்த டவர்களை விற்பனை செய்து அதில் கிடைக்கும் தொகையைக் கொண்டு கடனை அடைக்கும் முயற்சியில் ஈடுபடுவதாகக் கூறப்படுகிறது. மறுபுறம் ஐடியா மற்றும் வோடஃபோன் நிறுவனங்கள் இணைவதற்கான பணி நடைபெற்று வருகிறது. இவ்விரு நிறுவனங்களும் இணைந்தால் 43 கோடி வாடிக்கையாளர்களுடன் இந்தியாவின் மிகப் பெரிய தொலைத் தொடர்பு நிறுவனமாக அப்புதிய நிறுவனம் உருவெடுக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...