உச்ச நீதிமன்றம்: அமலாகிறது புதிய நடைமுறை!

உச்ச நீதிமன்றம்: அமலாகிறது புதிய நடைமுறை!
பொதுநல வழக்குகளை இனிமேல் உச்ச நீதிமன்ற
தலைமை நீதிபதி தலைமையிலான தீபக் மிஸ்ரா அமர்வு மட்டுமே விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோடை விடுமுறைக்கு பிறகு, ஜூலை 2 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் திறக்கப்படவுள்ளது. அன்றைய தினம் முதல் புதிய நடைமுறை அமலுக்கு வரவுள்ளது. இதன்படி, உச்ச நீதிமன்றத்தில் தொடரப்படும் அனைத்து பொதுநல வழக்குகளையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ரஞ்சன் கோகோய், லோகூர், குரியன் ஜோசப், ஏ.கே.சிக்ரி, பாப்தே, ரமணா உள்ளிட்டோர் அடங்கிய அமர்வு மட்டுமே விசாரிக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அனைத்து பொதுநல வழக்குகளையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவோ, அல்லது அவரது தலைமையிலான அமர்வு மட்டுமே விசாரிக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, சமூக நீதி தொடர்பான புகார்கள், தேர்தல் முறைகேடு புகார்கள், ஆட்கொணர்வு மனு, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகள் ஆகியவற்றையும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா அமர்வு விசாரிக்கும் எனக் கூறப்பட்டுள்ளது.

காடுகள், வன உயிரின பாதுகாப்பு, மரங்களை வெட்டுதல் மற்றும் நிலத்தடி நீர் அளவு போன்றவற்றுடன் தொடர்புடைய வழக்குகளை நீதிபதி லோகூர் விசாரிப்பார்.

நீதிபதி குரியன் ஜோசப் அமர்வு, தொழிலாளர் சட்டங்கள், வாடகைச் சட்டம், குடும்பச் சட்டங்கள், நீதிமன்ற அவமதிப்பு மற்றும் தனிப்பட்ட சட்டங்கள் ஆகியவற்றை விசாரிக்கும்.

நீதிபதி ஏ.கே.சிக்ரி, நேரடி மற்றும் மறைமுக வரிகள், தேர்தல் மற்றும் குற்றவியல் விஷயங்கள், தனிப்பட்ட சட்டம், சாதாரண சிவில் வழக்குகள் மற்றும் சட்ட அதிகாரிகளின் நியமனம் ஆகியவற்றை விசாரிப்பார் எனத் தெரிவிக்கப்படுள்ளது.

சமீபகாலமாக உச்ச நீதிமன்றத்தில் வழக்குகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக, வழக்குகள் ஒதுக்குவதில் வெளிப்படைத் தன்மையில்லை என, நீதிபதிகள் செலமேஸ்வரர், ரஞ்சன் கோகாய், லோகூர், குரியன் ஜோசப் ஆகிய 4 பேரும், கடந்த ஜனவரி மாதம் குற்றம் சாட்டியிருந்தனர். அதையடுத்து, வழக்கு ஒதுக்கீட்டு நடைமுறைக்கான வரைவு அறிக்கையை கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...