ஆவின் கூட்டுறவு பால் உற்பத்தி நிறுவனத்தின் பல்வேறு பகுதிகளில் செயல்பட்டுவரும் தொழிற்சாலைகளில் காலியாக உள்ள மூத்த உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணியின் தன்மை: சீனியர் ஃபேக்டரி அசிஸ்டன்ட்
பணியிடங்கள்: சென்னை, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் - 152, திருவண்ணாமலை - 35, நீலகிரி - 35, ஈரோடு - 9, சேலம் - 11, தஞ்சாவூர் - 33.
வயது வரம்பு : 1/1/18ன் தேதியின்படி ஒசி பிரிவினருக்கு - 18-30
எஸ்சி பிரிவினருக்கு - 18-35
எஸ்.சி.ஏ - 18-35
எம்பிசி - 18-32
பிசி - 18-32 வயதுக்குள் இருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.15,700 - 50,000/-
கல்வித் தகுதி: பன்னிரண்டாம் வகுப்பு அல்லது ஐடிஐ முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கக் கடைசித் தேதி: 16.07.2018
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100/- எஸ்சி/எஸ்டி பிரிவினருக்குக் கட்டணத்தில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் விவரங்களுக்கு http://www.omcaavinsfarecruitment.com/Aavin%20notification%20new%20english.pdfஎன்ற லிங்க்கை கிளிக் செய்து அறிந்துகொள்ளலாம்.

