நெட்வொர்க் நிறுவனங்களுக்கு அபராதம்!
அழைப்புத் துண்டிப்பு விதிமுறைகளை மீறிய
நெட்வொர்க் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கும் இறுதிக்கட்டப் பணியில் டிராய் இருப்பதாக அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
இந்தியத் தொலைத் தொடர்புத் துறையானது சமீப காலமாகவே வருவாய் இழப்பு உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளைச் சந்தித்து வருகிறது. நெட்வொர்க் சந்தையில் புதிதாக நுழைந்த ரிலையன்ஸ் ஜியோவுக்கு இதர நிறுவனங்கள் போதிய அழைப்பு இணைப்புகள் வழங்குவதில்லை போன்ற புகார்கள் எழுந்தன. மேலும், இதர நெட்வொர்க் இணைப்புகளிலும் அழைப்பு துண்டிப்புப் பிரச்சினைகள் இருப்பதாக வாடிக்கையாளர்களிடையே புகார்கள் அதிகரித்துள்ளன. எனவே வாடிக்கையாளர் நலனைக் கருத்தில்கொண்டு, முறையாகச் சேவை வழங்காத நெட்வொர்க் நிறுவனங்களுக்குத் தொலைத் தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான டிராய் அபராதம் விதிக்க முடிவு செய்துள்ளது.
2017ஆம் ஆண்டின் அக்டோபர் மாதம் முதல் சேவைத் தரத்துக்கான விதிமுறைகளை மீறிய நெட்வொர்க் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க முடிவுசெய்துள்ள டிராய் அதற்கான பணியில் இறங்கியுள்ளது. அதன்படி அக்டோபர் - டிசம்பர் மற்றும் ஜனவரி - மார்ச் காலாண்டுகளுக்கான சேவை விவரங்களை டிராய் பரிசீலித்துள்ளது. நெட்வொர்க் விதிமுறைகளை மீறிய நிறுவனங்களுக்கு நோட்டீஸ்கள் அனுப்பப்பட்டுள்ளதாகவும், அவற்றுக்குப் பதிலளிக்க 21 நாட்கள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் டிராய் தலைவர் எஸ்.சர்மா தெரிவித்துள்ளார். எவ்வளவு அபராதம் விதிக்கப்படும் என்ற முடிவு இன்னும் இறுதி செய்யப்படவில்லை. எனினும் ரூ.10 லட்சம் வரையில் அபராதம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.