ரெட்மி பயனாளர்களுக்கு குட் நியூஸ்!
சியோமி நிறுவனம் ரெட்மி 6 புரோ எனும் புதிய மாடல் செல்போன் விற்பனையை சீனாவில் இன்று (ஜூன் 26) தொடங்கவிருக்கிறது.
இந்திய செல்போன் சந்தையில் மலிவு விலைக்குள்ளேயே பல வசதிகள் கொண்ட போன்களை விற்பனைக்குக் கொண்டுவந்து கோடிக்கணக்கான பயனாளர்களை ஈர்த்தது சியோமி நிறுவனம். அதனால் அந்நிறுவனத்தின் செல்போன்கள் இந்திய செல்போன் சந்தையில் முன்னணி இடத்தில் இருக்கின்றன. அந்த வகையில் அதன் இன்னொரு முயற்சியாக ரெட்மி 6 புரோ எனும் மாடலை சீனாவில் கடந்த ஜூன் 24 ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது சியோமி நிறுவனம்.
சிறப்பம்சங்கள்
5.84 இன்ச் டிஸ்ப்ளே , ஆண்ட்ராய்டு MIUI 9, 5 மெகா பிக்சல் முன்புற கேமரா, 12 மெகா பிக்சல் பின்புற கேமரா, 4000mAh பேட்டரி சக்தி,178 கிராம் எடை, ஃபிங்கர் பிரின்ட் ஆகிய வசதிகள் இந்த மாடலில் உள்ளன.
3 GB RAM - 32GB ROM மாடல் இந்திய மதிப்பில் சுமார் ரூ. 10,400க்கும் 4 GB RAM-32GB ROM ரூ.12,500க்கும், 4GB RAM-64GB ROM மாடல் ரூ.13,600க்கும் விற்பனை ஆகிறது. இந்திய நேரப்படி இன்று இரவு 8.30 மணிக்கு இந்த விற்பனை தொடங்குகிறது. அதே நேரம் இந்தியாவில் இந்த மாடல்கள் விற்பனைக்கு வரும் தேதி மற்றும் விலை குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ரெட்மி நோட் 5 புரோவில் அப்டேட்
அதேபோல் ரெட்மி நோட் 5 புரோ பயனாளர்களுக்கு ஒரு சிறப்பு செய்தியையும் அறிவித்துள்ளது சியோமி. அதாவது கடந்த பிப்ரவரியில் அறிமுகம் செய்த இந்த மாடலில் MIUI Android 7.1.2 Nougat எனும் வசதி மட்டுமே இருந்து வந்தது. இந்தநிலையில் ஜூன்29ஆம் தேதி இதனை MIUI 9.5 ஆக அப்டேட் செய்யவுள்ளது சியோமி.
இந்தத் தகவலை சியோமி அதன் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் நேற்று (ஜூன்25) அறிவித்துள்ளது.
