*ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகம் நடத்திவரும் எலைட் பள்ளியில் பயின்று, பொறியியல்
கல்லூரிகளுக்கான கட் ஆஃப்பில் அதிக மதிப்பெண்கள் பெற்று அசத்திய மாணவ மாணவிகளுக்கு, மாவட்ட ஆட்சியர் பாராட்டு*
*ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், வள்ளல் பாரி நகராட்சி நடுநிலைப் பள்ளி வளாகத்தில் அரசுப் பள்ளிகளில் சிறப்பான முறையில் பயின்றுவரும் மாணவர்களை மெருகேற்றும் வகையில், மீள் திறன் பயிற்சி வகுப்புகள் (எலைட் கிளாஸ்) நடத்தப்பட்டு வருகின்றன. 2017-18 -ம் கல்வி ஆண்டில் ப்ளஸ் டூ பொதுத்தேர்வு எழுதி, இங்கு பயின்ற 43 மாணவர்களும் தேர்ச்சிபெற்றனர்*
*இதில், பிரகாஷ் என்ற மாணவர் 1,126 மதிப்பெண்கள் பெற்றார். மேலும் 1,100 மதிப்பெண்களுக்கு மேல் 10 பேரும், ஏனைய 33 மாணவர்களும் 1,000 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றனர்*
*மாணவர் பிரகாஷ், பொறியியல் சேர்க்கைக்கான கட் ஆஃப்பில் 199.25 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். 195 கட் ஆஃப் மதிப்பெண்களை 10 மாணவர்களும், 190 கட் ஆஃப் மதிப்பெண்களை 22 மாணவர்களும் பெற்றுள்ளனர்*
*இதன்மூலம், தமிழகத்தின் தலைசிறந்த அண்ணா பல்கலைக்கழகம் உள்ளிட்ட பல்வேறு சிறந்த பொறியியல் கல்லூரிகளில் படிப்பதற்கான வாய்ப்பைப் பெற்றுள்ளனர்*
*அரசுப் பள்ளிகளில் பயின்று, இந்த அரிய சாதனைகளைப் படைத்த எலைட் பள்ளி மாணவ மாணவிகளை மாவட்ட ஆட்சியர் நடராஜன் நேரில் சந்தித்துப் பாராட்டி, பரிசுகள் வழங்கினார்*
*இந்த ஆண்டு எலைட் பள்ளியில் பயிலும் மாணவர்கள் இத்தகைய சாதனையை முன்னுதாரணமாகக்கொண்டு, நல்ல மதிப்பெண்கள் பெறும் வகையில் பயிலுமாறு கேட்டுக்கொண்டார். இந்நிகழ்ச்சியின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முருகன், எலைட் சிறப்புப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர் நவநீதகிருஷ்ணன் ஆகியோர் உடனிருந்தனர்*