அமெரிக்காவில் அதிசயம் : 15 வயதில் பி எச்டி படிக்கும் இந்திய வம்சாவளி மாணவர்


இந்திய வம்சாவளி மாணவர் ஒருவர் தனது 15 ஆம் வயதில் பட்டப்படிப்பை முடித்து பி எச் டி சேர்ந்துள்ளார்.


  கேரளாவை சேர்ந்த தாஜி ஆபிரகாம் மற்றும் பிஜோ ஆபிரகாம் ஆகியோரின் மகன் தனிஷ்க் ஆபிரகாம். குழந்தை மேதை எனப் பெயரெடுத்த இவர் தனது பாடங்களை விரைவிலேயே முடித்து வந்தார்.


  இவர் தனது 15 ஆம் வயதில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார். உலகிலேயே பொறியியல் பட்டப்படிப்பை இவ்வளவு சிறுவயதில் முடித்தவர் என்னும் பெருமையை பெற்றுள்ளார்.


  தற்போது தனிஷ்க முனைவர் கல்வியான பி எச் டி யில் சேர உள்ளார். கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் இவர் பயோ மெடிக்கல் பிரிவில் பொறியியல் பட்டப்படிப்பை முடித்துள்ளார்.


  இதே பல்கலைக்கழகம் இவருக்கு முனைவர் கல்வி கற்கும் வாய்ப்பை அளித்துள்ளது.


  தனிஷ்க் இந்த வாய்ப்பை மகிழ்வுடன் ஏற்றுக் கொண்டுள்ளார். இன்னும் 4 அல்லது 5 ஆண்டுகளில் முனைவர் பட்டம் பெறுவேன் என உறுதிபட கூறி உள்ளார்.


  அவர் தீ விபத்தில் சிக்கியவர்களின் உடலைத் தொடாமலே இதயத் துடிப்பை கண்டறியும் கருவியை கண்டு பிடித்துள்ளார். மேலும் புற்றுநோயை முழுவதாக குணப்படுத்தும் சிகிச்சை முறையக் கண்டுபிடிப்பதே தனது லட்சியம் என கூறி உள்ளார்.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...