புதுடில்லி: கடந்த, 2011ம் ஆண்டு முதல் இதுவரை
18,800 என்.ஜி.ஓ.,க்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அமைச்சர் தகவல்
ராஜ்யசபாவில் இது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் கிரண் ரிஜ்ஜு தெரிவித்ததாவது: வெளிநாடுகளில் இருந்து நிதியுதவி பெறும் என்.ஜி.ஓ.,க்கள் எப்.சி.ஆர்.ஏ., எனப்படும் வெளியுறவு பங்களிப்பு (கட்டுப்பாடு) சட்டத்திற்கு உட்பட்டு செயல்பட வேண்டும். இந்த சட்டத்திற்கு உட்படாமல் செயல்பட்டு வந்த என்.ஜி.ஒ.,க்கள் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
இதன் காரணமாக, 2015 -16ம் ஆண்டில் ரூ. 17,799 கோடியாக இருந்த வெளிநாட்டு நிதியுதவி 2016 - 17 ம் ஆண்டில் ரூ. 15,329 கோடியாக குறைந்து விட்டது. 2014 - 15ம் ஆண்டில் இது ரூ.15,305 கோடியாக இருந்தது. 2014 - 15ம் ஆண்டில் எப்.சி.ஆர்.ஏ., அமைப்பிடம் முறையாக உரிமம் பெற்று 40 ஆயிரம் என்.ஜி.ஓ.,க்கள் செயல்பட்டு வந்தன. தற்போது இது, 24 ஆயிரம் என்.ஜி.ஓ.,க்களாக குறைந்து விட்டது.
கடந்த மூன்று ஆண்டுகளில் மட்டும், 13 என்.ஜி.ஓ.,க்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இவை விதிகளை மீறி செயல்பட்டு வந்தவை. 2011ம் ஆண்டு முதல் இதுவரை, 18,800 என்.ஜி.ஓ.,க்களின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. ஆண்டு வருவாய் - செலவு கணக்கை தாக்கல் செய்ய 2017 ம் ஆண்டு ஜூன் 14ம் தேதி வரை அவகாசம் வழங்கிய பிறகும், 2,547 என்.ஜி.ஓ.,க்கள் வருவாய் - செலவு கணக்கை தாக்கல் செய்யவில்லை. இவ்வாறு கிரண் ரிஜ்ஜு கூறினார்.
காரணம் என்ன?
வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் என்.ஜி.ஓ.,க்கள் ஆண்டுதோறும் வருமான வரி கணக்கை கண்டிப்பாக தாக்கல் செய்ய வேண்டும். தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு வருமான வரி கணக்கை தாக்கல் செய்யாவிடில் உரிமம் ரத்து செய்யப்படும். வெளிநாடுகளில் நிதியுதவி பெறும் என்.ஜி.ஓ.,க்கள் இந்தியாவில் அந்த தொகையை எதற்காக செலவிட்டனர் என்பதற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய வேண்டும். பெரும்பான்மையான என்.ஜி. ஓ.,க்கள் தங்களை யாரும் கேள்வி கேட்க கூடாது, வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய மாட்டோம், வரி கட்ட மாட்டோம் என்ற ரீதியில் செயல்படுகின்றன.
தற்போதைய மத்திய அரசு, ஒவ்வொரு துறையிலும் சட்டவிரோத நடவடிக்கைகளை தடுத்து நிறுத்த, நடவடிக்கை எடுத்து வருகிறது. வருமான வரி சட்டங்களை தீவிரமாக அமல்படுத்துகிறது. இதனால் ஏராளமான என்.ஜி.ஓ.,க்கள் பாதிக்கப்பட்டுள்ளன.அவர்கள் சமூக வலைதளங்கள் மற்றும் மதத்தின் பின்னால் மறைத்து கொண்டு மத்திய அரசையும், பிரதமரையும் மோசமாக விமர்சிக்கின்றன.