ரயிலில் ஓடிய எலி: புகார் கூறியவருக்கு ரூ.19,000 இழப்பீடு!


ரயிலில் ஓடிய எலி: புகார் கூறியவருக்கு ரூ.19,000 இழப்பீடு!
மும்பையில் ரயில் பயணத்தின்போது எலிகள் ஓடும் அளவுக்குச் சுகாதார சீர்கேடு நிலவியது குறித்து நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்த வழக்கறிஞருக்கு ரூ.19,000 இழப்பீடாக வழங்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மும்பையைச் சேர்ந்தவர் ஷீத்தல் கனகியா. வழக்கறிஞரான இவர், தனது உறவினர்களுடன் சேர்ந்து கடந்த 2015ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதி, மும்பையிலிருந்து எர்ணாகுளம் வரை செல்லும் துரந்தோ ரயிலில் பயணம் மேற்கொண்டனர். அந்த ரயிலில் ஷீத்தல் கனகியா பயணித்த பெட்டியில் சில எலிகள் அங்குமிங்குமாக ஓடியதைக் கண்டு ஷீத்தல் உள்ளிட்ட சில பயணிகள் அலறியுள்ளனர். மேலும், அந்தப் பெட்டியில் ஆங்காங்கே குப்பைகளுடன் சுகாதாரமின்றி காணப்பட்டுள்ளன.

இதுதொடர்பாக, ஷீத்தல் கனகியா ரயில் பணியாளரிடம் புகார் தெரிவித்தபோது, ரயிலில் எலிகள் இருப்பது சகஜம் என்றும், இவ்வளவு பெரிய ரயிலைச் சுத்தப்படுத்துவதற்குப் பணியாளர்களுக்கு வெறும் மூன்று மணி நேரம் மட்டுமே கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ரயிலில் வழங்கப்பட்ட உணவுகள் தரம் குறைந்து காணப்பட்டுள்ளது குறித்தும், கழிவறை அசுத்தமாக இருப்பது குறித்தும் ரயில் டிக்கெட் பரிசோதகரிடம் ஷீத்தல் கனகியா புகார் தெரிவித்துள்ளார். இதற்கு அவர் முறையான விளக்கமும் அளிக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், பயணம் முடிந்து வீடு திரும்பிய ஷீத்தல் கனகியா, 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தெற்கு மும்பை மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் புகார் தெரிவித்துள்ளார். இந்தப் புகார் குறித்து விசாரித்த நீதிமன்றம், ரயிலில் சேவைக் குறைபாடு இருந்ததை உறுதி செய்தது. மூன்று ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், வழக்கறிஞர் ஷீத்தல் கனகியாவுக்கு மத்திய ரயில்வே ரூ.19,000 இழப்பீடு வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

SSTA- கல்வித்துறை உயர் அதிகாரிகள் சந்திப்பின் இன்றைய 10.01.2024 தொடர்ச்சி!!!

  நேற்று மதிப்புமிகு பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலாளர் அவர்களுக்கு பணிப்பளு அதிகமாக இருந்த காரணத்தினால் சந்திக்க முடியவில்லை. இன்று 10.01...